இந்த குமரி அனந்தன் எங்கிருக்கின்றார் என தெரியாது…

Image may contain: 1 person, smilingஇந்த குமரி அனந்தன் எங்கிருக்கின்றார் என தெரியாது,

ஆனால் அவரை தேடி கண்டுபிடித்து தமிழிசையிடம் பல பழைய வரலாறுகளை கற்பிக்க சொல்ல வேண்டும்

காரணம் ஒரு வரலாறும் தெரியாமல் தமிழிசை இஷ்டத்திற்கு ஏய் காங்கிரசே, ஏய் திமுகவே என கத்திகொண்டே இருக்கின்றார்

எச்,ராசா கத்தினால் அவருக்கு ஒன்றும் தெரியாது என விட்டுவிடலாம், ஆனால் தமிழிசை எப்படிபட்ட காங்கிரஸ்காரரின் வாரிசு?

விட முடியுமா? முடியாது.

நிச்சயம் குமரி அனந்தன் அருகில் இருந்தால் தமிழிசை இப்படி எல்லாம் அர்த்தமின்றி உளற மாட்டார்

ஆக எங்காவது அவர் முதியோர் இல்லத்தில் இருந்தாலோ, அல்லது அனாதையாக தெருவில் சுற்றிகொண்டிருந்தாலோ உடனே தெரிவிக்கும்படி உலகம்வாழ் தமிழருக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்

சிக்காவிட்டால் ஹேபியஸ் மனு தாக்கல் செய்தாவது அவரை கண்டுபிடிக்கும் அளவிற்கு நிலமை சிக்கலாகிகொண்டிருக்கின்றது

(படத்தில் இருப்பவர்தான் குமரி அனந்தன், அப்படி ஒருவர் முன்பு தமிழக அரசியலில் இருந்தார் என நம்புங்கள், அதுவும் காங்கிரசில் இருந்தார் என நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்..)