தமிழிசைக்கு போனிலும், கடிதத்திலும் மிரட்டல் : செய்தி

தமிழிசைக்கு போனிலும், கடிதத்திலும் மிரட்டல் : செய்தி

இது வன்மையாக கண்டிக்கதக்கது, அவர் ஒரு அரசியல்வாதி அவர் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றால் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம்

மிரட்டல் என்பதை எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது.

மாட்டுகறி தடை என சொன்னது தமிழிசை அல்ல, அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மத்திய அரசின் அலுவலகம், மத்திய அரசு சம்பந்தமான அணுவுலை அடுப்பு என சென்று எதிர்ப்பு தெரிவிக்கலாம்

தமிழிசையினை மிரட்டுவது என்பது கோழைகளின் வேலை, வீணர்களின் மூளை கெட்ட சதி

தமிழிசை இதற்கெல்லாம் அஞ்ச கூடாது, கருத்து ரீதியாக உங்களை விமர்சிப்போமே அன்றி, நீங்கள் என்றும் மரியாதைக்குரியவரே

பொதுவாழ்வில் ஒரு புதுமை பெண்ணாக இவ்வளவு தூரம் வந்ந்திருப்பதை வாழ்த்துகின்றோம், அடிக்கடி நீங்கள் செய்யும் அரசியலில் சில நேரம் சிரிக்கின்றோம்

மற்றபடி நீங்கள் யாருக்கும் எதிரி அல்ல, எங்களை போன்றோரின் எதிர்முகாமின் ஜனநாயக‌ ஆதரவு என்றும் உங்களுக்கு என்றென்று உண்டு

இந்த மிரட்டல் விடுவித்தவனை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்…