மிசா காலத்தில் கலைஞர் …
மிசா காலத்தில் கலைஞர் எப்படி எதிர்வினையாற்றினார் என்பதை வாசித்துகொண்டிருந்தேன்
அந்த கடுமையான காலத்தில் தேசியவாதி சோ ராமசாமியின் துக்ளக்கும், திராவிட கலைஞரும் ஒருசேர எதிர்த்திருக்கின்றார்கள், இருவரின் துணிவும் ஆச்சரியமே
சோ எழுதி தள்ளியிருக்கின்றார், பத்திரிகை தடை சட்டம் இருந்தாலும் கருப்பு சந்தையில் துக்ளக் கிடைக்கும் அளவிற்கு அவருக்கு வரவேற்பு இருந்திருக்கின்றது
அப்படி ஒரு உணர்ச்சியான தமிழ்நாடு அன்று இருந்திருகின்றது, ராமசந்திரனை தவிர எல்லோரும் உணர்ச்சியுடன் போராடியிருக்கின்றார்கள்
சோ பத்திரிகையாளர், ஆனால் கலைஞர் அரசியல்வாதி, செய்தி தணிக்கை இருந்ததால் சிறைபட்டோர் பெயரை கூட நேரடியாக எழுதமுடியா இக்கட்டான நிலை
இத்தனை பேர் சிறையில் என்பதை மக்களுக்கு சொல்லவேண்டிய நிலை, ஆனால் மத்திய அரசு சொல்லவிடாது
யோசித்தார் கலைஞர், மலர் மாலையுடன் அண்ணா சமாதி சென்றார் இங்கு வரமுடியாதோர் பட்டியல் என ஒன்றை வாசித்தார், மறுபடி மறுபடி வாசித்தார், புரிந்துகொண்ட கூட்டத்தின் கரகோஷம் கடலலையினை விட ஆர்பரித்தது
கட்சி கூட்டம் நடத்த தடை
உடனே திமுக இல்லங்களில் சுபகாரியங்கள் நிகழ்ந்தன, கல்யாணம் காதுகுத்து என திருமண மண்டபங்கள் மாறின, அங்கு தோன்றிய கலைஞர் அட்டகாசமாக அரசியல் பேசினார்.
இந்த விழாக்களுக்கு எப்படி தடைபோட முடியும்? யாரையெல்லாமோ கட்டிபோட்ட இந்திராவிற்கு கலைஞரை ஒன்றும் செய்ய முடியவில்லை, ஏதாவது ஒரு வழியில் மிக சாகசமாக கட்சியினை, தொண்டர்களை நடத்திகொண்டே இருந்தார்.
இந்தியாவில் மிசாவில் தீவிரமாக இயங்கிய தலைவர் தலைவர் கலைஞரே, அவரின் மதிநுட்பத்தை கண்டு வியந்த இந்திரா பின்பு மனதார அவரின் ரசிகையாகவே மாறினார்.
பின் கலைஞர் ஊழல்வாதி என்பதற்கு ஒரு ஆதாரம் சிக்காதா என சர்காரியாவினை அவர் அனுப்பியதும், கலைஞரின் சாதுர்யத்தில் நீதிபதி சர்காரியா தாடியினை பிய்த்து ஓடியதும் இந்திரா கலைஞரை மிகபெரிய பிம்பமாக பார்த்த காலங்கள்..
அப்படிபட்ட அசாத்திய மனிதரின் இடத்தினை இன்னொருவன் திமுகவில் நிரப்ப முடியாது, ஓரளவு நிரப்ப முயற்சிக்கலாம்
ஸ்டாலின் அந்த ஓரளவு என்பதன் பக்கம் கூட வரவே பல வருடம் ஆகலாம்..