இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: ம.நடராஜன்

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: ம.நடராஜன்

அதாவது மன்னார்குடி குடும்பத்திற்கு கட்டாயம், பெரும் சாணக்கியரன நடராஜனின் திட்டங்கள் ஜெயா என்ற இவரின் கைபொம்மை இருந்தவரை பிசகாமல் பலித்தது, ஜெயா என்ற மக்கள் சக்தியினை சுற்றி ஒரு மாய வலை பின்னி விளையாடினார் நடராசன்.

சும்மா சொல்ல கூடாது, அதிமுகவின் பெரும் தலைகளை, வி.என் ஜாணகியினை எல்லாம் ஓட அடித்த இவரின் வியூகம் எல்லாம் ஆச்சரியமானவை, ஜெயாவினை முதல்வராக்கியதில் இவரின் பங்கு மகத்தானது

இப்பொழுது வாளில்லா வீரனை போல, அங்குசமில்லா பாகனை போல களத்திற்கு வருகின்றார்

ஜெயா இருக்கும்பொழுது இவர் திட்டம் பலித்தது சாதனை அல்ல, இனி இவர் சாதித்தால் அதுதான் சாதனை

ஆக உண்மையான சோதனையினை முதன் முதலில் சந்திக்கின்றார் நடராஜன்.