கத்தார் பிரச்சினையில் துருக்கி சமரசம் பேசிகொண்டிருக்கின்றது

கத்தார் பிரச்சினையில் துருக்கி சமரசம் பேசிகொண்டிருக்கின்றது, இதன் மூலம் வேறு ஒன்றுமல்ல விஷயம் சிம்பிள்

ரஷ்ய உளவுதுறை கத்தார் கணிணியில் ஊடுருவியது, கத்தார் பலருக்கு உதவியது என்பதெல்லாம் இரண்டாம் பிரச்சினை, முதல் பிரச்சினை வித்தியாசமானது

அதாவது அரேபிய வளைகுடா நாடுகள் மன்னராட்சி நாடுகள், உலகெல்லாம் ஜனநாயகம் வேண்டும், மியன்மாரில் வேண்டும், ஹாங்காங்கில் வேண்டும், வடகொரியாவில் வேண்டும் , சிரியாவில் வேண்டும் என்றெல்லாம் பேசும் அமெரிக்கா அரபுநாடுகளின் மன்னராட்சியில் மட்டும் வாயே திறக்காது

வளைகுடா பகுதியில் மன்னராட்சியினை தூக்கி எறிந்த நாடுகளில் ஈரான் முக்கியமானது, 1980ல் அந்த புரட்சி உலகத்தையே ஆட்டி வைத்தது,

அது அண்டை நாட்டு மன்னர்களான சவுதி, குவைத், பஹ்ரைன் உட்பட பலநாட்டு மன்னர்களை கலங்க செய்தது, எப்படியோ கடந்து வந்தார்கள், பின் டுனிசியா, எகிப்து புரட்சிகளை தொடர்ந்து இந்த மன்னர்களுக்கு எல்லாம் அதீத எச்சரிக்கை

இப்பொழுது கத்தார் அரசர் தன் அடுத்த வாரிசுகளுக்கு வழிவிட்டிருக்கின்றார், இது அண்டை நாட்டு அரச குடும்பத்திலும் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தும், அந்த அரசர் பதவி விலகினால் போல நீங்களும் விலகினால் என்ன? என அந்த நாட்டு இளவரசர்கள் தங்கள் தாத்தாவினை விரட்டலாம்

கத்தார் பல வகைகளில் இவர்களோடு மாறுபட்டது , எரிவாயு பங்கீட்டில் ஈரானோடு அனுசரித்து சென்றது

ஈரானின் ஷியா அரசியலை விட அரபு நாடுகளுக்கு அவர்களின் மக்கள் புரட்சி ஆபத்து, நமது மக்களும் அப்படி பொங்கிவிட்டால் அரசுகளை தூக்கி எறிவார்கள் எனும் பயம்

அந்த பயமே இன்று கத்தாரை ஒதுக்கி வைக்கின்றன, ஈரானை பார்த்த்து கத்தார் திருந்தி, அதனை கண்டு நம் மக்களும் திருந்தினால் என்னாகும் எனும் அச்சம், உண்மையில் இது மக்களாட்சிக்கு அஞ்சி, தங்கள் கிரீடத்தை காப்பாற்ற அரபுநாட்டு அரசர்கள் செய்யும் அட்டகாசமே அன்றி வேறல்ல‌

இதில் தான் எல்லா அரசர்களும் ஒதுங்கிகொள்ள துருக்கி எனும் ஜனநாயக இஸ்லாமிய நாடு மட்டும் பஞ்சாயத்து பேசிகொண்டிருக்கின்றது, பஞ்சாயத்து நடைபெற்றுகொண்டே இருகின்றது