வைகோ விவகாரத்தை யாரும் ஒரு பொருட்டாகவே உலகில் கருதவில்லை
வைகோ விவகாரத்தை யாரும் ஒரு பொருட்டாகவே உலகில் கருதவில்லை, கோப்பால் சாமியின் பெயர் மலேசியாவின் கருப்பு பட்டியலில் இருப்பதால் அவரை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டு மலேசியா அதன் போக்கில் இருக்கின்றது
அது நியாயமும் கூட, உலகின் கொடூர தீவிராவாதியோடு புகைபடம் எடுத்து, அவன் கொடிபிடித்தலைந்து, அவனுக்காக வக்கலாத்து வாங்கி கோர்ட் வரை சென்று சீறிய ஒரு வெளிநாட்டவனை நான் நம் நாட்டில் அனுமதிப்போமா?
உதாரணத்திற்கு அல்கய்தாவுடனோ, ஐஎஸ் இயக்கதுடனோ தொடர்பு கொண்டிருந்த ஒரு ஐரோப்பியர், அவர்களோடு துப்பாக்கி சுட்டு, வீர கர்ஜனை செய்த ஒருவன், நான் இங்கிலாந்து குடிமகன், நான் இத்தாலி குடிமகன் என்னை இந்தியர் வீட்டு திருமணத்தில அனுமதியுங்கள் என டெல்லி குடிநுழைவு அதிகாரி முன்னால் நின்றால் இந்தியா விடுமா?
அவன் பெரும் குழப்பவாதி என தெரிந்தபின், அவன் திருமண வீட்டிற்கோ, திருட்டு வீட்டிற்கோ வந்தாலும் அனுமதிப்போமா? உன் காலே பட கூடாது என விரட்ட மாட்டோமா?
அதனைத்தான் மலேசியா செய்தது, அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நாட்டின் அமைதியும், சகோதரத்துவமும் அவர்களுக்கு முக்கியம்.
எதற்காக அனுமதிக்கவில்லை என்பது வைகோவிற்கும் தெரியும், அவருக்காக ஒப்பாரி வைப்பவர்களுக்கும் நன்றாக தெரியும் என்பதால் அதனை பற்றி சொல்ல என்ன இருக்கின்றது
குடிநுழைவு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம், சர்ச்சைகுரியவரோ அல்லது இவரால் சர்ச்சை வரும் என கருதபடுபவரோ ஏற்றுகொள்ளபடுவதே இல்லை
அப்படித்தான் முன்பு இந்தியா ஆண்டன் பாலசிங்கத்தை நாட்டைவிட்டு வெளியேற சொன்னது, இறுதிவரை அவரை இந்தியாவில் அனுமதிக்கவே இல்லை,
கிட்டு இந்திய எல்லையில் வந்தபொழுதே கடல் கடலில் போட்டு தள்ளியது
பிரபாகரன் தாயாரை அனுமதித்தாலும் அவரை வைத்து சில வீணர்கள் குழப்பம் செய்வார்கள் என தெரிந்துதான் அவரை இந்தியா ஏற்றுகொள்ளவில்லை
இந்த திமுகவினரை நாம் திட்டுவது எல்லாம் இதற்காகத்தான், ஆண்டன் பாலசிங்கத்தை இந்தியா ஓடவிட்ட கதையினையும், இறுதியில் நான் சிறுநீரக சிகிச்சைக்கு வருகின்றேன் என்றபொழுதும் இந்தியா மறுத்து நின்ற கதையினை, இந்த கிட்டு இந்திய கடலில் கால் வைத்தவுடன் போட்டு தள்ளிய கதையினை எல்லாம் இம்மாதிரி பார்வதியம்மாள் என தொடங்குபவகளின் முகத்தில் அடித்து சொல்ல வேண்டும்
ஆனால் ஏனோ உடன்பிறப்புக்கள் அதனை செய்வதில்லை, இவர்களை விடுங்கள் சுப.வீ போன்ற பேராசிரியர்களுமா சொல்ல கூடாது??
இந்திய நிலைப்பாடு அப்படித்தான், அதுதான் பார்வதி அம்மாவுக்கும் நடந்தது என்றால் இந்த சர்ச்சை எல்லாம் திமுக மீது படியவே படியாது.
அதுதான் குடிநுழைவு துறையின் கட்டுப்பாடு, எல்லா நாடுகளின் பொதுவான நடைமுறை
இன்று வைகோ அப்படித்தான் விரட்டபட்டிருக்கின்றார், வைகோவின் நண்பரான அந்த துணைமுதல்வரால் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை அல்லது முடியாது. குடிநுழைவு கட்டுபாடுகள் அப்படியானது
இன்று அமைதியாக இருப்பவர்கள் தான் இன்றும் பார்வதியம்மாளை கலைஞர் அனுமதிக்கவில்லை என சொல்லிகொண்டே இருப்பார்கள், மாநில முதல்வருக்கும் அப்பாற்பட்ட பெரும் விஷயம் நாட்டின் குடிநுழைவு என்பதை இனியாவது அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்
வைகோ என்னை சிறைகைதி போல நடத்தினார்கள் என்பதெல்லாம் சும்மா, அவரை அனுமதிக்காமல் மாற்று விமானத்தில் அனுப்பி வைத்திருக்கின்றார்கள், அவர்கள் கடமையினை செய்திருக்கின்றார்கள், வைகோ புலம்புவது சுத்த அபத்தம்.
உணவு கொடுக்கத்தான் செய்திருக்கின்றார்கள், உபசரிப்பெல்லாம் நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, இந்த சிங்கம் தான் முறைத்துகொண்டு இருந்துவிட்டு இங்கு வந்து சீறுகின்றது
வைகோ திரும்பி வந்த அவமானத்திற்கு கூட அழுதிருக்கமாட்டார், ஆனால் முக ஸ்டாலின் “யார்ப்பா வைகோவ தடுத்தது?” என கலாய்த்தார் அல்லவா? அதற்காகத்தான் கதறி கதறி அழுதிருப்பார்
உண்மையில் ஸ்டாலின் சொன்னது கண்டணம் அல்ல, கலாய்ப்பு, அதற்காக வைகோ குறைந்தது ஒரு மாதமாவது அழவேண்டும்..