சிலரை உடனே நாடுகடத்த வேண்டும்
சிலரை உடனே நாடுகடத்த வேண்டும், வைகோவினை போல சிக்கல் வந்தால் ஆளில்லாத தீவிற்காவது கடத்தவேண்டும்
காரணம் அபபடிபட்டவர்கள் கிள்ப்பிவிடும் புரட்டுகள் அப்படி
அதாவது நாடார் புகழ்பாடும் ஒருவர், திருவனந்தபுரம் என்றால் என்ன தெரியுமா? திரு+அனந்தபத்மநாபன்+புரம் என அர்த்தம், அனந்த பத்மநாபன் என்பது ஒரு நாடார், அது நாடாருக்கான ஊர் என குதித்துகொண்டிருக்கின்றார்
அட பரிதாபமே..
அனந்தம் என்றால் சாய்ந்திருத்தல் அல்லது படுத்திருத்தல் என பொருள், அனந்த நிலை.
பத்மநாபன் என்றால் என்ன? பத்மம் என்றால் தாமரை, நாபி என்றால் கொப்புள்
திருமாலின் இன்னொரு பெயர் பத்மநாபன்
திருமால் அனந்த நிலையில் இருக்கும் ஆலயம் உள்ள ஊர் திருவனந்தபுரம், திரு+அனந்த+புரம்
இப்படி இருக்க, எவனோ ஒரு நாடாருக்கு அந்த சாமியின் பெயரை பத்மநாபன் என வைத்துவிட்டதால், அந்த சாமியே நாடார் ஆகுமா?
இவர்கள் ஆராய்ச்சி அப்படித்தான் செல்கின்றது, இவர்களை அப்படிய் ஆளில்லா தீவுக்கு அனுப்புவது அல்லது இல்லாவிட்டால் சூரியன், சந்திரன் உட்பட காணும் எல்லாவற்றையும் நாடார் ஆக்கிவிடுவிவார்கள்.
கொசுறு
சிறையில் இருக்கும் சசிகலாவினை அமைச்சர்கள் சந்தித்தது தவறு : தமிழிசை
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் சரியாக பேசும் தமிழிசை இன்று பேசிவிட்டார்,
இனி அடுத்தவருடம் தான் சரியாக பேசுவார்.