திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றம்
எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுப்பு, திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றம்
இந்த பிரச்சினையினை விவாதிக்காமல் தீபா தீபக் சண்டையினையா சட்டசபையில் விவாதிக்க முடியும்? என்ன சபாநாயகரோ? சபை நியாமோ?
இன்னும் இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்பதே தெரியாது, மறுபடி இந்த அதிமுக உறுப்பினர்கள் தேர்வுபெறுவது என்பது அந்த ஜெயலலிதா திரும்ப வருவது போன்றது
அதனால் இருக்கும் இந்த கொஞ்சநாளில் அவையில் இருந்து பார்க்கட்டும், அதன் பின் வரவா போகின்றார்கள்??
திமுகவிற்கு என்ன? வருங்காலம் அவர்கள் காலம், அதனால் கெத்தாக எழுந்து போய்விட்டார்கள், திரும்ப வருவோம் என்ற அவர்கள் நம்பிக்கை அப்படி
இனி வாய்ப்பே இல்லை, அதனால் என்ன நடந்தாலும் எழும்பமாட்டோம் எனும் இவர்களின் படபடப்பான அச்சம் இப்படி