திராவிடம் , இந்துத்வா என்றால் என்ன என்பதை இப்படி சொல்லிவிடலாம் …

திராவிடம் , இந்துத்வா என்றால் என்ன என்பதை இப்படியே சொல்லிவிடலாம்
திப்பு சுல்தானை மத ரீதியாக குறிவைத்து வீழ்த்தியபின் இப்படி செய்தால் இந்தியாவினை பிடிக்கலாம் என்றும், இந்த கொள்கைபடியே குழப்பம் விளைவித்து இந்தியாவினை ஆளலாம் என வெள்ளையன் கண்டதுதான் இந்துத்வா
இத்தேசத்தை மதத்தின் பெயரால் பிரித்து ஆள்வது வெகு சுலபம் என்பதை அவன் கண்டபின் இந்துத்வா எண்ணங்களும், இஸ்லாமிய வெறுப்பும் வேகமெடுத்தது,
அதுவரை இந்திய இஸ்லாமியர்களை சகோதரர்களாகவும் ஆப்கானிய கொள்ளயர்களான கோரி, கஜினி போன்ற இஸ்லாமியரை மட்டும் வெறுத்த இந்தியர்களிடையே மொத்த இஸ்லாமியரையும் வெறுக்கும் குரோதம் வெள்ளையனால் உருவாக்கபட்டது
அதுதான் அவனை இத்தேசத்தை பிடிக்க வைத்தது, ஆள வைத்தது, மறுபடி துண்டாடவும் வைத்தது, காந்தி கொலையினையும் செய்ய வைத்தது
சுதந்திர இந்தியாவினையும் உடைய வைத்து, இன்று மசூதிகளையும் உடைய வைத்து நாட்டை ஒரு கொதிநிலையில் வைத்திருப்பது இந்துத்வா
வெள்ளையன் போட்ட விஷ வித்து இன்று விஸ்வரூபமாய் நிற்கின்றது
திராவிடம் என்றால் என்ன?
அந்த இந்துத்வாவும் உருப்படியாக இருந்துவிட கூடாதல்லவா? என்ன இருந்தாலும் மெஜாரிட்டி இனம், அதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த அவனால் அனுமதிக்கபட்ட இன்னொரு தத்துவம் திராவிடம்
அது கம்யூனிசத்தை வளரவிடாமல் தடுத்தது, சில விஷயங்களில் வெள்ளையனுக்கு அனுகூலமானது, இந்து மக்களிடையே இன்னொரு பிரிவினை ஏற்படுத்த திராவிட நாடு எனும் குரலை எழும்ப சொன்னது
அவன் நினைத்திருந்தால் ஒரு நொடியில் திராவிட குரலை நசுக்கியிருக்கலாம், ஆனால் கம்யூனிசம் பரவாமல் நாத்திகம் பேசிய திராவிடத்தையும், நீங்கள் போனால் பிராமணர் எங்களை அழித்துவிடுவர் எனும் ஒப்பாரியினையும் அவன் ரசித்தான்
அவனும் புன்னகைத்துகொண்டே வளரவிட்டான்,
இதுதான் திராவிடம்
ஆக இரண்டுமே வெள்ளையன் தன் வசதிக்காக வளரவிட்டு, இன்று இந்நாட்டை குழப்பமாக்கிகொண்டிருக்கும் விஷயங்கள்
ஆழ சிந்தித்தால் இதுதான் உண்மை
வெள்ளளையன் வருமுன் இங்கு இந்துத்வாவும் இல்லை திராவிட குரலும் இல்லை
அவனே உருவாக்கினான், அவனே வளர்த்தான், அவனே அதனால் இந்நாட்டினை இந்துத்வா எனும் பெயரால் உடைத்தான்
ஆனால் திராவிட நாடு என்பதை அவனால் செய்யமுடியவில்லை, காரணம் தென்னகம் அந்த பிரிவினை விரும்பவில்லை, விரும்பவும் விரும்பாது
வெள்ளையனிடம் திராவிட நாடு கொடு என மல்லுகட்டிய பெரியாரும், அண்ணாவும் சுதந்திர இந்தியாவில் ஏன் திராவிட நாடு கொடு ஏன் கேட்கவில்லை என்றால் இப்படித்தான், மக்களுக்கு திராவிட நாட்டில் விருப்பமில்லை என்பது அவர்களுக்கே தெரிந்தது.
அப்படியே காந்தி கொலைக்கு பின் இனி இந்துத்வா எடுபடாது என்பது இந்துமகா சபை, ஆர்.எஸ்.எஸ் போன்றவைகளுக்கும் தெரிந்தன, ஜன சங்கமும் உணர்ந்தது
ஆனால் அண்ணா அந்த திராவிடத்தை தந்திரமாக மாநில கட்சியாக மாற்றினார், அத்வாணி இந்துத்வானினை தேசிய கட்சியாக மாற்றினார்
அவை இரண்டுமே ஆளும் கட்சியாயின, இன்றும் ஆளுமை செலுத்துகின்றன
இதற்கு மேலும் இந்துத்வா, திராவிடம் புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள், உங்களுக்கு புரியவே புரியாது
ஆனால் அதன் பெயரால் நாம் அடித்துகொண்டு சாகின்றோம் என்பது மட்டும் உண்மை