இதோ யுத்தம் வெடிக்கின்றது
இதோ யுத்தம் வெடிக்கின்றது, சீனா ஆயுதம் பலம் என்ன? நம் ஆயுத பலம் என்ன? என்றெல்லாம் பலர் பட்டியல் போட்டுகொண்டிருகின்றனர்.
ஆயுதம் எவ்வளவு என்பதை விட மகா முக்கியமான விஷயம் , யுத்தம் நடத்தும் அளவிற்கு இருவரிடம் பணம் இருக்கின்றதா என்பது
யுத்தம் என்பது அவ்வளவு செலவுகளை விழுங்கும் விஷயம், ஒன்றுமே இல்லாத இரு நாடுகள் மோதும், அல்லது செல்ல செழிப்பான இரு நாடுகள் மோதும், இதுதான் இன்றைய யதார்த்தம்
இந்தியா வளரும் நாடு, சீனாவும் அதே நிலை அங்கும் ஏகபட்ட திட்டங்கள் தொங்கலில் உள்ளன, அவர்கள் பணமதிப்பும் விழுந்திருக்கின்றது
இருக்கும் கொஞ்சமதிப்பையும் கெடுத்து இந்தியாவோடு யுத்தம் நடத்தி சீனா தெருவுக்கு வராது, இந்தியாவும் அந்த தவறை செய்ய ஆயிரம் முறை யோசிக்கும்
ஆக இருவருமே யுத்தம் நடத்த தயார் இல்லை என்பதுதான் நிஜம், சும்மா உருண்டு வருவார்கள் , உரசுவார்கள் அத்தோடு சரியாகிவிடும்
யுத்தம் நடத்தி நாசமாய் போக இருவரிடமும் பெரும் பண நடமாட்டம் இல்லை, அதனால் இப்போதைக்கு சிக்கல் இல்லை