பிக் பாஸ் : “பரணியே உள்ளே போ” , “உள்ளே போ”

கிரிக்கெட்டில் பேட் செய்யும் பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் பவுலர்களின் பந்துக்கு பயந்து வெளியே வந்தால் விடுவோமா? கையினை பிடித்து முதுகில் மிதித்து உள்ளே போ என தள்ளி விடமாட்டோமா?

அப்படி இந்த பரணி என்பவரையும் கதற கதற பிடித்து பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் ஒப்புகொண்டுதானே உள்ளே சென்றார்?

இப்பொழுது தப்பி ஓடினால் எப்படி? விடலாமா?

நாம் இன்னும் 80 நாட்கள் இந்த இம்சையினை பார்த்து தொலைக்கும் இம்சை இருக்கும்பொழுது இவர் எப்படி தப்பலாம்

“பரணியே உள்ளே போ” , “உள்ளே போ”


புது புது அர்த்தங்கள் படம் ஓடிக்கொண்டிருக்கின்றது, அந்த ஜெயசித்ரா “காக்கிநாடா காஞ்சனா” என்ற பாத்திரத்தில் தெலுங்கில் மிரட்டிகொண்டே இருக்கின்றார்

இந்த சீமானுக்கு ஏதும் தண்டனை விதிக்கபடுவதாக இருந்தால், அவரை கட்டிவைத்து இந்த படத்தினை பார்க்க வைக்க பரிந்துரைக்கலாம்..