சின்ன சின்ன செய்தி….
கள்ளவோட்டு போட்டாவது அந்த விடியா மூஞ்சி சிநேகனை விரட்டிவிட்டால் இந்த தமிழகத்திற்கு மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன்
கொஞ்சபேர் வந்து வனவாசம் படி , கலைஞரை கண்ணதாசன் விமர்சித்திருக்கின்றார் ராமசந்திரனை போல அவரையும் திட்டு, திட்டியே தீரவேண்டும் என ஒற்றைகாலில் நிற்கின்றார்கள்
கண்ணதாசனின் எம்ஜிஆர் உள்ளும் புறமும் படித்துவிட்டார்களா இல்லையா என தெரியவில்லை
அப்படி கன்ணதாசனை நம்புகின்றார்கள் என்றால் அதில் அண்ணாவினை கூட அவர் உரித்து வைத்திருப்பார், கட்சியின் பெயரிலிருந்து அண்ணாவினை நீக்க நீங்கள் தயாரா?அவர் அண்ணாவினை பற்றி சொன்னது மட்டும் பொய்யாம், கலைஞரை பற்றி சொன்னது மட்டும்உண்மையாம்



சினிமாவில் தொடை தெரிய பாவாடை கட்டி வந்த ராம சந்திரன் “புரட்சி தலைவன்”
அவரோடு பல இடங்களில் டவுசர் போட்டுவந்த ஜெயலலிதா “புரட்சி தலைவி”
ஆனால் இவர்கள் அளவிற்குகூட வராமல் கண்ணியமாக வந்த குஷ்பூ கவர்ச்சி நடிகையா?
போங்கடா டேய், அந்த ராமசந்திரனை “கவர்ச்சி நடிகன்” என சொல்லிவிட்டு இந்த பக்கம் வாருங்கள்
சூரியனில் பெரும் ஓட்டை விழுந்திருக்கின்றது, அண்டார்டிக்கா கண்டபனி பாறையிலும் விரிசல் என விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்
உலகில் ஏதும் மாறுபாடு ஏற்படுமோ என்ற ஆராய்ச்சிகள் திகில் கிளப்புகின்றன
அதனை விட திகில் கிளப்பும் விஷயம் எது தெரியுமா?
இந்த அரைகுறை கிறிஸ்தவ அழிச்சாட்டியங்கள் இதனை கேள்விபட்டால் “இதோ கடைசி காலம், இதோ அழிவு, பைபிளில் சொல்லபட்ட இறுதிகாலம் இதுதான், அதோ இயேசு வருகின்றார் அல்லேலூயா…” என தொடங்கி அழிச்சாட்டியம் செய்வார்கள்
இந்த உலகம் அழிவதில் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்
இதனை கேள்விபட்டு எந்த அறைகுறையாவது இது கடைசி காலம், மனந்திரும்புங்கள் என சொன்னான் என்றால் அவனை பிடித்து “இது அடிக்கடி உலகில் நடக்கும் விஷயம் , நீ முதலில் திருந்து” என சொல்லி சொல்லி அடிக்கவேண்டும்
அண்டார்டிக்காவில் பனிப்பாறை உடைந்தது, விஞ்ஞானிகள் ஆய்வு
இதற்கு எதற்கு ஆய்வு, நம் செல்லூர் ராஜுவிடம் சொன்னால் 10 ஏசி மெஷின்களுடன் அண்டார்டிக்கா சென்று கண்டத்தையே குளிர்விப்பார், பாறை ஒட்டிவிடும்
இதற்கு இவ்வளவு பெரும் ஆய்வா?
இப்பொழுது தினகரன் உள்ளே வெளியே என செய்தி மாறி மாறி வந்திருக்கின்றது
இதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தார்கள் எனும் செய்தி பின்னால் வரும்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிப்பு , சட்டபேரவையில் எதிர்கட்சி தலைவரின் இருக்கைக்கு கீழ் இது வைக்கபட்டிருந்தது எனும் பகீர் செய்திகள் வருகின்றன
ஒருவேளை சதிகாரர்கள் திட்டம் நிறைவேறியிருந்தால் இந்நாடு எவ்வளவு பெரும் அழிவினை சந்தித்திருக்கும், எவ்வளவு பெரும் கலவரம் வெடித்திருக்கும்
எப்படியோ இம்முறை இந்தியா தப்பியிருக்கின்றது
பெரும் கலவரத்திற்கும் அசாதாரண சூழலுக்கும் இந்நாடு மூழ்க யாரோ திட்டமிடுகின்றார்கள்.
அந்தசக்தி யாராய் இருப்பினும் கண்டுபிடித்து அழிக்க வேண்டியது அரசின் பொறுப்பு
இந்தியா மிக விழிப்பாய் இருக்கவேண்டிய நேரமிது, அந்த விழிப்பில் ஒவ்வொரு இந்தியனுக்கும் கடமை உண்டு
கலாபவன் மணியின் மரணத்தில் திலீப்புக்குத் தொடர்பு? : கேரளாவில் பரபரப்பு
ஏற்கனவே திலீப் கொடுத்த நெருக்கடியில்தான் அற்புதமான நடிகன் திலகன் மனம் நொந்து செத்தார் என்ற சர்ச்சை இருந்தது,
பின்பு பாவனா சம்பவத்தில் உள்ளே இருக்கின்றார் அவர்
இப்பொழுது கலாபவன் மணி சாவுக்கும் இவர் காரணமாக இருக்கலாம் என்ற சர்ச்சை வெடிக்கின்றது
ஆக கேரளாவிலும் ஒரு ஆட்டோ சங்கர் இருந்திருக்கின்றார், ஆ.கே செல்வமணிக்கு அடுத்த கதை ரெடி
“ஓவியாவுக்கு ஓட்டு போட்ட 1.5 கோடி மக்கள், எனக்கு வாக்களித்திருந்தால் நான் மக்களை காப்பாற்றியிருப்பேன்” : அன்புமணி
அதாவது இந்த ஓவியா வாங்கிய வோட்டில் கொஞ்சம் கூட பாமக வாங்கவில்லை என்றும் சொல்லலாம் மிஸ்டர் “லவ்- பெல்”
மிஸ்டர் சித்தாராமையா,
காங்கிரஸுக்கும் அதிமுகவிற்கு ஒருவிதமான புரிந்துணர்வு வந்திருப்பது யாருக்கு தெரியாது?
ஜெயா இல்லாத அதிமுகவினை நோக்கி காங்கிரஸ் புன்னகைப்பதும், பாஜக அதனை கண்டு கண்களை உருட்டுவதும் உலகம் அறியாததா?
சசிகலாவிற்கு கன்னட காங்கிரஸ் அரசு சிறையில் உதவவில்லை என்றால், அந்த நீதிபதி குன்ஹாவினை கொண்டு ஒரு விசாரணை கமிஷன் அமைக்க தயாரா?
6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
இப்படி 6 ஆண்டுகளுக்கான விருதுகளைத்தான் மொத்தமாக கொடுக்கும் தமிழக அரசு, வேறு எதனையும் இப்படி கொடுக்காது.
அதனால் 6 ஆண்டுகளாக கிடைக்காத பென்சன், ஓய்வூதியம், மானியம் இன்னபிற நலதிட்டங்களை எல்லாம் மொத்தமாக இந்த அரசு தரும் என பொதுமக்கள் அப்பாவிதனமாய் நம்பிவிட கூடாது.
இஸ்ரோ அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
நெல்லை மாவட்டம் மகேந்திர கிரி ராக்கெட் திரவ எரிபொருள் நிலையத்தில் 3 இஸ்ரோ அதிகாரிகள் இடைநீக்கம் செய்யபட்டுள்ளனர்
என்ன காரணம் என தெரியவில்லை
மிக முக்கியத்துவம் வாய்ந்த, தேசத்தின் பெரும் மையங்களில் ஒன்றான அந்த நிலையத்தில் என்ன நடந்தது? எதற்காக சஸ்பெண்ட் செய்யபட்டார்கள் என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்
ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா அடையும் வெற்றியினை தடுக்க, ஒருவேளை அந்நிய சக்திகள் ஊடுருவியிருந்தால் அது மிகபெரிய பாதிப்பினை கொண்டுவரும்
இதுகுறித்து மேலதிக விவரங்களை கொடுக்கவேண்டியது அரசின் கடமை