ரஜினிக்கு பிடிக்காத ஒரு சொல் “வேலை நிறுத்தம்”

No automatic alt text available.இஸ்ரேல் அரபு நாடுகள், அமெரிக்கா ரஷ்யா, அமெரிக்கா வடகொரியா பிரச்சினையினை விட பெரும் தகறாது தமிழ் சினிமாவில்தான் இருக்கின்றது

ஒரு பக்கம் நடிகருகளுக்குள் கும்மாங்குத்து, சரத் அணி , விஷால் அணி பாண்டவர் அணி என ஏக சண்டை

இன்னொரு பக்கம் நடிகருகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் குத்துசண்டை

அந்த பக்கம் இயக்குநருக்கும் ஏதோ சம்மேளனத்துக்கும் கமிஷன் தகறாறு,

அந்தப் பக்கம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் மோதல், அதில் தியேட்டர்காரர்களும் தள்ளி நின்று சோடாபாட்டில் வீசுவார்கள்

இவை எல்லாம் கொஞ்சநாள் நடக்காமல் இருந்தால் அந்த பிரச்சினையினை பெப்சி எடுத்துகொள்ளும்,

இப்போது பெப்சி முறை , அது தகறாறில் இறங்கிவிட்டது

ஆக ஆளாளுக்கு அடித்துகொண்டே இருப்பது அவர்கள் பொழுதுபோக்கு , முன்பெல்லாம் ஏதும் சிக்கல் என்றால் “அய்யா”, “அம்மா” என கண்ணை கசக்குவார்கள், இப்போது இருக்கும் சாமி வேறுவகை, கிட்டசென்றால் கண்ணை குத்திவிடும் என்பதால் இந்த பெப்சி பிரச்சினை ரஜினிக்கு சென்றுவிட்டது, அவர் கர்ஜித்துவிட்டார்

ஏன் கர்ஜித்தார் அன்னாரின் படம் சூட்டிங் நடக்கின்றதாம் அது தடைபட்டுவிட்டதால் கிணறுபோன பன்னீசெல்வம் போல தவிக்கின்றார்

சூட்டிங் மட்டும் இல்லையென்றால் சசிகலா புஷ்பா போல காணாமலே போயிருப்பார், யழவுபட்ட சூட்டிங் இருப்பதால் கத்திவிட்டார்.

அவர் எதனையும் பொறுப்பாராம், தன்னை ரஞ்சித் வச்சி செய்வதையும் பொறுப்பாராம், தன்னை இன்னமும் நம்பும் ரசிகர்களின் பரிதாபத்தை கூட பொறுப்பாராம், ஏன் தனுஷை கூட பொறுப்பாராம்

ஆனால் “வேலை நிறுத்தம்” என்றால் அவருக்கு பிடிக்காத வார்த்தையாம்

அதாவது அவர் படத்திற்கு இடைஞ்சலாக வரும் எல்லா வார்த்தையும் அவருக்கு பிடிக்காத வார்த்தைதான், அது கட்சி, அரசியல் , ரசிகர், பாபா, இமயமலை, என எதுவாக இருந்தாலும் சரி,

இப்பொழுது “வேலை நிறுத்தம்” வந்திருப்பதால் அது பிடிக்கவில்லை

இதெல்லாம் அவரின் ரசிகர்கள் கவலைபடவேண்டிய விஷயம், இவர் அழைத்தால் நம் “வேலை எல்லாம் நிறுத்தி”விட்டுத்தானே செல்கின்றோம்

இவர் ஏதும் உளறினால் நம் “வேலையினை நிறுத்திவிட்டுத்தானே” கவனிக்கின்றோம் என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கவேண்டும்.

ஆக அவரின் ரசிகர்களே அவர் பொதுவாக சொல்லவருவது ஒன்றுதான், எல்லோரும் வேலையினை பாருங்கள்..

எனவே வேலை நிறுத்தம் அவருக்கு பிடிக்காத வார்த்தையாம், எவனாவானது அவர் சொல்வதை பின்பற்றுவதாக இருந்தால் வேலைவெட்டியினை எல்லாம் விட்டுவிட்டு அந்த வருங்கால ரஜினி படங்களை பார்க்காதீர்கள்

“வேலை முக்கியம்” என சொல்லிவிட்டு என்றாவது தமிழ் ராக்கர்ஸில் சனிகிழமை இரவு பாருங்கள்

உங்கள் தலைவன் சொல்லை மதிப்பவர்கள் என்றால் இதனைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும் ரசிக பெருமக்களே