களைப்பேயின்றி கலோரிகளை குறைக்க சைக்கிள் மிக சிறந்த வழி.

Image may contain: bicycle and outdoor1980களில் வாடகை சைக்கிள் அமோகம், கிராமங்களை இணைக்கும் விஷயமாக அதுதான் கருதபட்டது. தமிழகத்தின் பிராதன தொழிலாக அதுவும் இருந்தது.

காலமாற்றத்தில் அந்த தொழில் அடியோடி ஒழிந்தது. கொஞ்சமும் அடையாளமில்லை

இப்பொழுது அதனை வேறு விதமாக உலகெல்லாம் புதுப்பிக்கின்றார்கள், தொழில்நுட்பம் அந்த வித்தை எல்லாம் செய்கின்றது.

அதாவது இக்காலத்தில் பெருகியிருக்கும் விஷயம் மூன்று , முதலாவது சாப்பாட்டு கடைகள் அடுத்து அது செரிமானம் ஆக ஜிம் போன்ற பயிற்சி நிலையங்கள், இதனால் பெருகும் நோய்களுக்கு சென்று படுத்துகொள்ள மருத்துவசாலைகள்.

இதில் சைக்கிளை போன்ற உடற்பயிற்சி இல்லை , நீச்சலும் சைக்கிளும் மிக சிறந்த உடல் பயிற்சிகள்.

களைப்பேயின்றி கலோரிகளை குறைக்க சைக்கிள் மிக சிறந்த வழி.

இதனை மேல்நாட்டவர்கள் கண்டுகொண்டார்கள், பூங்காக்கள் சைக்கிள்களால் நிரம்பின , அதனை சில வியாபார புள்ளிகளும் நோட்டமிட்டன, விளைவு நவீன வாடகை சைக்கிள் வந்தாயிற்று.

போனில் ஒரு ஆப்ஸை நிறுவிகொள்ள வேண்டியது, கட்டணம் செலுத்தவேண்டியது அந்த கம்பெனிக்காரன் வைத்திருக்கும் சைக்கிள் வரிசைக்கு செல்லவேண்டியது, போனில் செலுத்தும் கட்டணம் தீரும் வரைக்கும் சைக்கிளை மிதிக்கவேண்டியது

இது உலகெல்லாம் பிரபலமாகிவருகின்றது, இங்கும் திரும்பும் திசையெங்கும் பூங்காக்களில் நிறுத்தியிருக்கின்றார்கள், ஆப்ஸ் இருந்து அதில் காசும் இருந்தால் ஜாலியாக ரைடு செல்லலாம்

பின் பூங்காவிலே வைத்துவிட்டு வந்துவிடலாம், நமது குறுக்கு மூளை அதனை லபட்டிகொண்டு ஓட சொல்லலாம், ஆனால் ஜிபிஎஸ் ஜிப் வைத்திருப்பார்கள், அது இருக்குமிடம், கடைசியாக எடுத்த நபர் விவரமெல்லாம் அவர்களிடம் இருக்கும், லபக் என்று அமுக்கிவிடுவார்கள்

பஞ்சர் ஆக எல்லாம் வாய்ப்பே இல்லாதபடி நவீன டயர்களை போட்டிருப்பதால் பராமரிப்பு குறைவு

ஆக ஒழிந்த வாடகை சைக்கிள் தொழில் நவீனமாக கார்ப்பரேட் ஸ்டைலில் தொழில்நுட்பத்துடன் எப்படி மறு உருவெடுக்கின்றது.

ஏற்கனவே உபர், கிராப் என வாடகை கார்கள் ஆப்ஸ் வந்து அந்த தொழிலையே பாடாய் படுத்துகின்றது.

யார் இயக்குகின்றார்கள்? யார் முதலாளி? யாரிடம் நாம் பணம் கொடுக்கின்றோம் என்பெதெல்லாம் தேவையில்லை, நாம் யார் என்பதும் அவனுக்கு தேவையே இல்லை

“காரமடை ரங்கநாதனுக்கு சைக்கிள் தரமுடியாது..” என கவுண்டமணி பாணியில் மறுக்க வாய்ப்பே இல்லை.

அல்லது வடிவேலு போல சைக்கிள் நிறுத்தும் போது பணம் தருவேன் , அதுவரை சுத்துவேன் என சுற்றிகொண்டிருக்கவும் முடியாது.

எல்லா தொழிலும் இப்பொழுது தொழில்நுட்பமயமாகின்றன, அதில் சில பழைய தொழில் மறுபிறப்பும் எடுக்கின்றது.

கொஞ்சம் வியாபார மூளை இருந்தால் இந்த தொழில்நுட்ப உலகில் எவ்வளவும் சம்பாதிக்கலாம். எந்த தொழிலும் சாத்தியம்.

இன்னும் ஏராளமான தொழில்கள் இப்படி கார்பரேட் உலகில் வரலாம், நொடிக்கொரு விஷயங்கள் வருகின்றன, வரட்டும்

அந்த சைக்கிளில் ஒன்றை எடுத்து சுத்தினேன், நன்றாகத்தான் இருந்தது.

நெடுநாளைக்கு பின் சைக்கிள் மிதித்தபொழுது பள்ளிக்கு சென்ற காலங்கள் நினைவுக்கு வந்தன, அக்கால தோழிகள் அருகில் சைக்கிளில் வருவது போலவே தோன்ற்றிற்று

அவர்கள் எப்படி இங்கே? என உற்று நோக்கினால் பாகம் பிரியாள் மிக கவனமாக சைக்கிள் மிதித்துகொண்டிருந்தார்