கேரளாவில் தலித் அர்ச்சகராகிவிட்டாராம்…

கேரளாவில் தலித் அர்ச்சகராகிவிட்டாராம், தமிழகத்தில் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள்

அதில் திராவிடகழகத்தினரும், திமுகவினரும் பொங்குவதுதான் மகா ஆச்சரியம்

அதாவது ” கடவுள் இல்லை, அதை நம்பாதே, கடவுளை வைத்து பிராமணன் நம்மை எல்லாம் சிந்திக்கவிடாமல் ஏமாற்றுவான்..” என்பதுதான் அவர்களின் முழக்கம்

அந்த கோவிலில் எந்த சாதிக்காரன் அர்ச்சகராக இருந்தால் இவர்களுக்கென்ன?

அவர்களுக்கு பிராமணன் அர்ச்சகரானால் கோவிலில் இருப்பது கல்லாகிவிடுகின்றது, தாழ்த்தபட்டவன் அர்ச்சகரானால் தெய்வம் வந்துவிடுகின்றது.

தாழ்த்தபட்டவன் அர்ச்சகரானால் இவர்கள் எல்லாம் பெரியார் கொள்கைகளை துறந்துவிட்டு ஆலயபிரவேசம் செய்துவிடுவார்களா? அப்பொழுது கடவுள் நம்பிக்கை வந்துவிடுமா?

இப்படி எல்லாம் கேட்டால் நம்மை ஆரிய அடிவருடி என்பார்கள், சொல்லட்டும்

பெரியாரின் உண்மையான தொண்டர்களான திராவிட சிங்களுக்கு கோவில் என்பது ஏமாற்று கூடம், அந்த ஏமாற்று கூடத்தில் தலித்தும் ஏமாற்றவேண்டும் என்பதுதான் அவர்கள் சிந்தாந்தமோ என்னமோ.

இதனை நினைத்தாலே குழப்பம் தான் மிஞ்சும்

நெடுநாள் தமிழகத்தை ஆண்ட கலைஞருக்கு கடந்த முறைதான் இதனைபற்றி ஞானம் வந்தது, ஒரு சட்டத்தை அறிவித்துவிட்டு “பெரியார் நெஞ்சில் இருந்த முள்ளை எடுத்துவிட்டேன்” என்றார்.

அப்படியானால் பெரியாருக்கு பிராமண அர்ச்சகர்தான் விரோதியா , தலித் இருந்தால் பெரியார் ஆத்திகன் ஆகிவிடுவாரா என யார் கேட்பது?

பின் அது சம்பந்தமாக வழக்கெல்லாம் நடந்தது. பெரியார் நெஞ்சில் முள் மீண்டும் குத்தபட்டது

ஆகம விதிப்படிதான் அர்ச்சகர் நியமிக்கவேண்டும் என சொல்லியது உச்ச நீதிமன்றம்

இப்பொழுது கேரளாவில் தலித் அர்ச்சகர் நியமிக்கபட்டாயிற்று, அந்த ஆகம விதி ஆமை விதி எல்லாம் என்னாயிற்று என கேட்பவர் யார்?

இப்பொழுது இதனை சாக்காக வைத்து வீரமணி கும்பல்கள் காவடி எடுக்க தொடங்கிவிட்டன‌

பெரியார் அடிபொடிகளே, தலித் அர்ச்சகர் நியமிக்கபட்டால் பெரியார் கொள்கைகளை துறந்து நீவீர் ஆலயம் புக தயாரா? இல்லை அல்லவா?

பின் ஏன் இத்தனை ஆர்பாட்டம்? எந்த கோவிலில் எந்த சாமி இருந்தால் உங்களுக்கு என்ன? எந்த சாதி அர்ச்சகர் இருந்தால்தான் உங்களுக்கு என்ன?