அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம்
தந்தி டிவி முதல் புதிய தலைமுறை, நியூஸ் 7 என ஒரு பயலும் இந்த அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம்
அட பாஜகவிலிருந்து ஒருவனும் வருவதாக தெரியவில்லை. தடாலடி தமிழிசை கூட இந்த விஷயத்தில் குளோராபாம் குடித்த அளவிற்கு அமைதியாகிவிட்டார்
இந்த டிவிக்களின் பத்திரிகா தர்மம் உண்மையென்றால், எங்கள் தங்க தலைவி குஷ்பூவினை அழைத்து இந்த விஷயத்தை அலச சொல்லலாம்
தலைவி கேட்கும் கேள்வியில் அமித்ஷாவே இந்தியாவினை விட்டு ஓடிவிடுவார், அப்படி தெறிக்கவிடுவார் தலைவி
ஆனால் இந்த ஊடகங்கள் கள்ள மவுனம் சாதிக்கின்றன
ஏய் டிவி நாட்டாமைகளே, எங்கள் சிங்கத்திற்கு இதில் ஒரு வாய்ப்பினை கொடுக்காவிட்டால், இனி நீங்கள் இம்மாதிரி விவாதம் நிகழ்த்த தகுதியில்லாதவர்கள் என அர்த்தம்.