வடகொரிய அதிபருக்கு ராக்கெட் விடுவதும், அணுகுண்டு வெடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது

தமிழிசை விடும் அறிக்கை போல வடகொரிய அதிபருக்கு ராக்கெட் விடுவதும், அணுகுண்டு வெடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

No automatic alt text available.


அதனை காட்டி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது

பொருளாதார தடையில் பல வகை உண்டு. பாயாசத்திற்கு முந்திரி தரமாட்டோம் என தொடங்குவார்கள் அதன் பின் சேமியா, ஜவ்வரிசி என தடைபோடுவார்கள், இறுதியில் அடுப்பெரிக்க விறகு தரமாட்டோம் எனும் நிலைக்கு சென்றுவிடும்

வடகொரியாவின் பொருளாதார தடையும் அந்த அடுப்பை அணைக்கும் நிலைக்கு சென்றாயிற்று, எரிபொருள் தடை வடகொரிய கப்பல்கள் நகர தடை எனும் அளவிற்கு கடும் இறுக்கம்

கடுமையான பொருளாதார தடை என்பது மக்களை வாட்டும், பாதிக்கபடும் மக்கள் அரசினை எதிர்ப்பார்கள் என்பது மேற்குலக கணக்கு

அதாவது மக்களை மருந்து முதல் பெட்ரோல் வரை கிடைக்காமல் செய்து முடக்கினால், மக்களே பொங்கி எழுந்து அந்த வெள்ளை தக்காளியினை ஜூஸ் போட்டுவிடுவார்கள் எனும் கணக்கு அது.

ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் அமெரிக்காவிற்கு கிடைத்தது, கொஞ்சநாளைக்கு முன்பு வடகொரியா ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தபொழுது கடும் பூமி அதிர்ச்சி அப்பக்கம் ஏற்பட்டது

நான் வெடித்த குண்டுகள் பூமி அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றன, இது அமெரிக்காவில் விழுந்தால்.. என வெற்றி சிரிப்பு சிரித்தான் அந்த வெள்ளை தக்காளி

அதன் பின் கடுமையான எரிபொருள் தடையினை அமெரிக்கா அறிவித்தது

இந்நிலையில் இன்று காலை வடகொரியா பக்கம் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றது

இது சந்தேகமே இல்லை வடகொரியா குண்டுதான் என அமெரிக்கா சொல்ல தொடங்கிற்று, இனி அடுத்த கடுமையான தடை பாயலாம். அது மருந்து மாத்திரை வரை செல்லலாம்

நிலநடுக்கத்திற்கு காரணம் வடகொரியா ஹைட்ரஜன் குண்டா அல்லது இயற்கையான நிலநடுக்கமா என தெரியவில்லை

வடகொரிய அதிபர் அது இயற்கையான நிலநடுக்கம் என்றாலும் அதனை சொல்லபோவதுமில்லை, சொன்னால் அவரின் கெத்து குறையும்.

ஆக மிக சிக்கலான பொருளாதார தடையினை வடகொரிய மக்கள் எதிர்கொள்ள போகின்றார்கள்.