நெருப்புடா நெருங்குடா பாப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்…

இப்பொழுதெல்லாம் நிறைய தியாக வரலாறுகளை நம் பார்வைக்கு கொண்டு வருகின்றார்கள்.
குஷ்பூவிற்காக எவ்வளவு தியாகமும், தீரா ரசிப்புடனும் ஏராளமானோர் இருந்திருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது
தலைவி இதனை தெரிந்தால் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைவார் என்பதில் சந்தேகமில்லை
அப்படித்தான் செய்திகள் வருகின்றன, தியாக தலைவன் கோபால் என்பவரை நினைத்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த அந்த ஆனந்த நிலையிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன
ஏதோ ஒரு ஊரில் இரு கோயில்கள் கட்டினார்களாம், ஒன்று குஷ்பூ கோவில் இன்னொன்று அவருக்காக வேண்டிகொள்ள ஒரு அம்மன் கோவில் என ஒரு தகவல்
சார் எங்க ஊர்ல ஒருத்தர் இருக்கார் சார், குஷ்பூ கூடத்தான் அரிசி சோறு சாப்பிடுவேன் என இன்றுவரை தண்ணீர் மட்டும் குடிக்கிறார் சார் என ஒரு தகவல்
அண்ணே எங்கஇருக்கிய, குஷ்பூ பெயரில் பல கடைகளை நடத்துபவரும், குஷ்பூ பிறந்த நாளன்று ஊருக்கே விருந்தளிக்கும் நபரை எல்லாம் எனக்கு தெரியும் என இன்னொரு தகவல்
இன்னும் வந்துகொண்டே இருக்கின்றது, ஏராளமானோர் ரகசியமாக தம்பி நானும் குஷ்பூ ரசிகன் என முகமூடி போட்டு சொல்லிகொள்கின்றார்கள்
ஆக குஷ்பூவிற்கு பெரும் அபிமானம் இருந்திருக்கின்றது, சிலர் பிரபலம் இல்லாமல் ரசிகன் என சொல்லிகொண்டார்கள், பலர் குடும்பம் என்ன நினைக்குமோ? அடுத்தவன் என்ன நினைப்பானோ? அவன் வீட்டு நாய், பூனை, மாடு எல்லாம் என்ன நினைக்குமோ என முகமூடி போட்டு ரசித்திருக்கின்றார்கள்.
நமது சங்கம் இந்த கட்டுபாடுகளை எல்லாம் அடித்து நொறுக்கி தள்ளி, தலைவி பெயரை உரக்க சொல்லும்பொழுது எல்லோரும் ஆர்வமுடன் ஓடிவருகின்றார்கள்
ஆக தமிழகத்தை விரைவில் பெரும் சுனாமி தாக்க இருக்கின்றது என்ற எச்சரிக்கை மட்டும் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கபடுகின்றது
“நெருப்புடா நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்”
சந்திரமுகி படபிடிப்பில் என்னை பார்த்ததும் ரஜினி வேகமாக செட்டுக்கு ஓடினார் : நயன் தாரா
பின்னே, அப்படி பயங்கரமான முகரையினை பார்த்து ரசிக்க அவர் என்ன குருடர்களான Babu Rao என்பவரா? இல்ல Chandran Kannan என்பவரா?