மெர்சல் படம் வெளிவர என்ன சிக்கல்?

Image may contain: 6 people, people smiling, text

மெர்சல் படம் வெளிவர என்ன சிக்கல்? பழனிச்சாமியினை ஏன் விஜய் சந்தித்தார் : பரபரப்பு செய்திகள்

இதில் என்ன பரபரப்பு? விஷயம் இதுதான்

பச்சை தமிழன் பழனிச்சாமி ஆள, அவருக்கு உதவியாக படுபயங்கர பச்சை தமிழன் பன்னீர் துணைமுதல்வராக ஆண்டுகொண்டிருக்க‌..

இவர் “ஆளப்போறான் தமிழ்ன்ன்னு” ஆடிகொண்டிருந்தால் பழனிச்சாமிக்கு கோபம் வராமல் என்ன வரும்? பின் படம் எப்படி வரும்?

விஜயிடம் பழனிச்சாமி என்ன கேட்டிருப்பார்?

“ஏம்பா ஆளபோறான் தமிழன்னா?, ஆண்டுகொண்டிருக்கும் நான் தமிழன் இல்லையா? பன்னீர் இல்லையா? தமிழிசை தமிழர் இல்லையா?

நாங்கல்லாம் ஆளும் போது, நீ ஆளபோறான்னு தமிழன்னு தியேட்டர்ல ஆடுனா என்ன அர்த்தம்?

எங்கே? இப்பொழுது எங்கள் முன் அந்த பாட்டுக்கு ஆடு பார்க்கலாம், மிஸ்டர் பன்னீர் அவர் முகத்தில் விபூதி அடியுங்கள்

ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக் , ஆடுங்கள் மிஸ்டர் விஜய் “


‘மெர்சல்’ படத்துக்காக இன்று அவசர ஆலோசனை, பதற்றத்தில் விஜய்

பாவம், மெர்சல்னு பேர் வச்சிட்டு, அவரே மெர்சல் ஆயிட்டாரு

மெரசல் என்றால் என்ன என விஜய்க்கு கதற கதற‌ சொல்லிகொடுத்து கொண்டிருக்கின்றார்கள், அநேகமாக விஜயின் அடுத்தபட டைட்டில் “கோமாளி”, “ஊமையன்”, “அல்லக்கை” , “காக்கா வலிப்பு” என‌ அமையலாம்.