காலம் தந்த ஒரே நம்பிக்கை குஷ்பூ

அமெரிக்கா ஏதும் போர் தயாரிப்பில் இறங்குகின்றது என்றால் அதன் அடிபொடிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எல்லாம் உடனே தயாராகும்

அப்படி சோனியா காந்தி வீட்டில் சலசலப்பு என்றால் தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் விழித்துகொள்ளும், அடுத்த தலைவர் நான் தான் என ஆளாளுக்கு மிக சரியாக 4 பேரோடு சுற்றுவார்கள்

அரபு நாட்டு தீவிரவாத குழுக்களை விட அதிக கோஷ்டி உள்ளது தமிழக காங்கிரஸ் என்பதால் இப்போதே கிளம்புகின்றார்கள்

கிளம்பட்டும்

எங்கள் தலைவி குஷ்பூதான் அடுத்த காங்கிரஸ் தலைவர், அதில் சந்தேகமில்லை

அதையும் மீறி அரசியல் கணக்கு, கூட்டணி கணக்கு என டெல்லி கணக்கிட்டால் அது குமாரசாமி கணக்காகவே இருக்கும்

ஜெர்மனியின் ஏஞ்சலா மார்கல் போல பெரும் திறமையானவர் குஷ்பூ, நிச்சயமாக அவர் ஆசியாவின் ஏஞ்சலா

அதனால் சொல்லிகொள்கின்றோம் , தமிழக காங்கிரசின் கடைசி நம்பிக்கை, காலம் தந்த ஒரே நம்பிக்கை குஷ்பூ

அதனையும் “கை”விட்டால், காங்கிரஸுக்கு தமிழகத்தில் எந்நாளும் இருட்டுதான்.