தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு

அதாவது அது கிறிஸ்தவ பள்ளியாம். எல்லா மத மாணவர்களும் படிக்கின்றார்களாம். இந்து மாணவிகள் தீபாவளிக்காக மெகந்தி வைத்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு சென்றதில் பள்ளியின் கட்டுபாடு நொறுங்கிவிட்டதாம்

இது மாணவர்களை தண்டிக்கும் அளவிற்கு சென்று, பின் பெற்றோர்கள் எல்லாம் வந்து விஷயம் பெரிதாகிவிட்டது.

இது மிக மிக வன்மையாக கண்டிக்கதக்க விஷயம்

அரசுக்கு மக்கள் கட்டும் வரியில்தான் இந்த பள்ளிகளுக்கு அரசு சம்பளம் கொடுக்கின்றது, எந்த சபையும் 100% சொந்த காசில் பள்ளி நடத்துவதில்லை அதெல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது

அப்படி அரசு கல்விக்காக செலவழிக்கும் பள்ளியில், சிறுபான்மையினர் எனும் போர்வையில் ஒளிந்திருந்து, அதுவும் இந்நாட்டு பிஞ்சுகளிடம் துவேஷம் காட்டுவது ஏற்றுகொள்ள முடியாதது

அம்மாணவர்கள் பள்ளிக்குள் தீபாவளி கொண்டாடியிருந்தாலோ அல்லது மத்தாபூ கொழுத்தியோ அதிரசம் சுட்டோ அழிச்சாட்டியம் செய்தால் கண்டிக்கலாம்.

ஆனால் மெகந்தி வைத்து ஏன் தீபாவளி கொண்டாடினாய் என்பதெல்லாம் சுத்த வெறுப்பில் வரும் வார்த்தைகள்

இந்த பள்ளியின் தாளாளர் யார் என தெரியவில்லை, ஆனால் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும்

அவர்களுக்கு சொல்வது இதுதான் “சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்” என சொன்னவர் இயேசு.

சிறுவர்களுக்கு இடைஞ்சலாய் இருப்பவன் கழுத்தில் கல்லை கட்டி கடலில் தள்ளுவது நலம், கடவுள் அதனை வெறுக்கின்றார் என சொன்னவரும் இயேசு

குழந்தைகளை, சிறுவர்களை அவர் அவ்வளவு நேசித்திருக்கின்றார். கள்ளமில்லா அந்த உள்ளங்கள் அவருக்கு பிடித்தமானவை

அந்த குழந்தைகளின் உள்ளங்களை நீங்கள் காயபடுத்துகின்றீர்கள் என்றால், நீங்கள் கிறிஸ்துவினை சிலுவையில் அறைகின்றீர்கள், அவரை கொல்கின்றீர்கள் என்றே பொருள். யூதாஸுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை

குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள், செய்த பாவத்திற்கு இயெசுவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அக்குழந்தைகளை பள்ளியில் அனுமதியுங்கள்

இயேசு அப்பொழுதுதான் மகிழ்ச்சியடைவார்

இல்லையேல் கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்த பழி உங்கள் தலைமேல் தங்கட்டும்.