காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல்
காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல்
சீன இயந்திரத்தில் இயக்கபடும் படகுகள் தொடர்பாக மீணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்திருக்கின்றது.
மீணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஒன்றும் அதிமுகவிற்கு புதிதல்ல
கல்பாக்கம் ராமசந்திரன் காலத்தில்தான் அணுவுலை வளாகமாக மாறிற்று, இன்னும் ஏராளமான சம்பங்களை சொல்லலாம்.
மெரீனாவினை சுத்தமாக்கி எனக்கு கல்லறை கட்ட போகின்றேன் என ராமசந்திரன் அங்கிருந்த மீணவ குப்பங்களை வால்டர் தேவாரம் தலமையில் அடித்துவிரட்டியது எல்லாம் பெரும் கொடுமை
கூடங்குள அணுவுலை விவகாரத்தில் ஜெயா காட்டிய கொடுங்கோலும் கொஞ்சமல்ல
இப்பொழுது காசிமேட்டிலும் அடிக்கின்றார்களாம்
ஆனாலும் மீணவ சமூக வோட்டு எங்கே விழும் என்கின்றீர்கள்? அதே அதிமுகவிற்குத்தான்
காரணம் படகோட்டி, மீணவநண்பன் எனும் மிகபெரிய தியாக திரைபடங்களை குல்லா ராமசந்திரன் அவர்களுக்காக நடித்து கொடுத்திருக்கின்றாராம்
டாஸ்மாக் ‘ரம்‘மில் தரம் இல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இது இப்பொழுதுதான் தெரிந்ததா? ஆனாலும் இவ்வளவு லேட்டாக ஆராய்சி செய்ய கூடாது.
அது ரம் என கண்டறியபடுவதற்கே தனி ஆராய்ச்சி தேவைபட்டிருக்கும்,
டாஸ்மாக்கில் எல்லா சரக்கும் ஒரே போலத்தான் இருக்கின்றது என அனுபவஸ்த குடிமக்கள் பல்லாண்டுகளாக சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்.