குஷ்பூவா? நயனா? நீங்களா? நாங்களா?

ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் குஷ்பூ ரசிகர் சங்கத்தில் இணைந்துகொண்டே இருக்கின்றார்கள்
துபாய், லண்டன், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் என எங்கிருந்தெல்லாமோ வந்து சங்கத்தில் இணைகின்றார்கள்
இவை எல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்.
இந்த உலகம் குஷ்பு ரசிகர்களால் நிரம்பியது
மிஸ்டர் கோபிநாத்,
நீங்கள் எல்லா தலைப்பிலும் நீயா நானா வைத்து நடத்தி முடித்துவிட்டு இப்பொழுது தலைப்பு கிடைக்காமல் தள்ளாடுகின்றீர்கள்
இங்கே ஒரு பெரும் தர்மயுத்தம் நடக்கின்றது. அதாவது குஷ்பூ ரசிகர் சங்கத்திற்கும், நல்லி எலும்பு நயன் சங்கத்திற்கும் ஒரே கருத்து மோதல்
இதனை யார் தீர்த்துவைப்பார் என தெரியாமல் கலங்கி நின்றபொழுதுதான் நீங்கள் கேரள நாட்டிளம் பெண்களுடனே என பாட ஆரம்பித்தது தெரிந்தது
விடுவோமா?
வேலை வெட்டி இல்லாமல் குட்டி சுவரில் மல்லாக்க படுத்து நயன் என புலம்பிகொண்டிருக்கும் இந்த Babu Rao Chandran Kannan போன்றோரை ஒரு பக்கம் அழையுங்கள்
Periya Samy , Sadhu Sadhath, Bilal Aliyar , Venkatesh Mothilal போன்றோருடன் சங்கம் ஒரு பக்கம் களமிறங்கும்
நிகழ்ச்சி நிச்சயம் மாபெரும் ஹிட் ஆகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
நிகழ்ச்சி முடிவில் அந்த எல்கேஜி பாய்ஸ் எமது சங்கத்தில் சரணடையும் விஷயமும் நடக்கும்
எங்கள் தர்மயுத்தம் வெற்றிபெறுவதை உலகமே பார்க்கும்.
ஏதோ உங்களுக்கும் குஷ்பூவால் தமிழக காங்கிரஸ் போல ஒரு திருப்பம் வரட்டும்
முடிந்தால் நடத்துங்கள்
அதற்கு முன்பு பாஷா ஸ்டைலில் இந்த நயன் கோஷ்டிகளுக்கு சவால் குடுக்கின்றோம்
டேய் எல்கேஜி பாய்ஸ்
குஷ்பூவா? நயனா?
நீங்களா? நாங்களா?
அண்ணாச்சி சும்மாதான் இருக்காரு, ரெடின்னு சொன்னா கோட் போட்டுட்டு வந்திருவாரு. முடிஞ்சா அண்ணாச்சி முன்னாடி விவாதத்திற்கு வாங்கடா பார்க்கலாம்