திமுகவில் சேர்கின்றாரா நடிகை கஸ்தூரி??
திமுகவில் சேர்கின்றாரா நடிகை கஸ்தூரி??
கஸ்தூரியின் பாஜக அனுதாபமும் , ஆரிய பாசமும் கொஞ்சமல்ல.
பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக அம்மணி உள்ளே நுழைய வாய்ப்பிருக்கின்றது என்பதால் திமுக தலமை கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது
ஹார்வேர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்காக 10 கோடி ஒதுக்கினார் பழனிச்சாமி
இது நல்ல, பாராட்டவேண்டிய செய்தி. இந்த ஒரு காரணத்திற்காக பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுகின்றது
திமுகவிற்கு தேர்தல் பயம் ஏற்பட்டிருப்பதால் போலி வாக்காளர் விவகாரத்தை கையில் எடுக்கின்றது : அமைச்சர் ஜெயக்குமார்
என்ன அமைச்சரே?
போலி வாக்காளர்களை நீங்குங்கள் என சொல்வது பயமா? இல்லை நீக்கமாட்டோம் என சொல்வது பயமா?
அந்த போலி வாக்காளர்களை நீக்கிவிட்டு தேர்தலை சந்திக்க நீங்கள் தயாரா? இல்லை அல்லவா?
இதன் பெயர்தான் பயம் அமைச்சரே.
தி.மு.க முன்னாள் எம்.பி செல்வகணபதியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
அன்னார் இப்பொழுது திமுக, அதற்கு முன் அதிமுக. சுடுகாட்டு ஊழலில் சிக்கிய அவரை, மூடநம்பிக்கைகளை சாடும் திமுக பின் பகுத்தறிவு காரணமாக சேர்த்துகொண்டது
இப்பொழுது குண்டு வீசியது யார்?
சுடுகாட்டு ஊழலால் பாதிக்கபட்ட ஆவி ஏதும் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம்
அணுவுலைக்கு எதிராக இன்று வள்ளியூரில் சீமான் சீற்றம்
அணுவுலை கிடக்குது அங்கிள் , முப்பாட்டன் முருகனி சிறப்பான ஆலயம் அமைந்திருக்கும் ஊர் அது
அங்கு சரவணபொய்கையினை தூர்வாருகின்றார்கள்.
நீர் முப்பாட்டன் முருகன் என கொடிபிடிப்பதும், வேல் தூக்குவதும் உண்மையானால் அந்த சரவணபொய்கையில் 4 பெட்டி மண் சுமந்துவிட்டு வாருங்கள்…