ஜெயா டிவி பொறுப்பு உணர்ச்சிக்கு பாராட்டுக்கள்
இப்பொழுதெல்லாம் மிக விருப்பமான டிவிநேரம் ஜெயா டிவி நியூஸ் நேரம்தான்
அப்படி பழனிசாமி அரசினை போட்டு அடிக்கின்றார்கள், கடும் விமர்சனங்கள். ஆனால் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது
அதிமுக டிவியே அதிமுக அரசை விமர்சிக்கும் அபூர்வ நிகழ்வு அது. சும்மா சொல்லகூடாது மகா அட்டகாசம் .
தமிழகத்தில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றது என்பது இப்பொழுதுதான் ஜெயாடிவிக்கு தெரிந்திருக்கின்றது.
ஆனால் அடிக்கடி தியாக தலைவி சின்னம்மா, அண்ணன் தினகரன் , இன்னும் சில அல்லக்கைகள் சொல்லும் துரோகி பேட்டிகள் எல்லாம் வரும் இடங்களில் கவனமாக மியூட் செய்துவிட வேண்டும்
அந்த ஒரு சிக்கலை தவிர, இப்போது நாட்டு நடப்பை உண்மையாக சொல்லும் ஒரே டிவி ஜெயாடிவி.
அந்த பொறுப்பு உணர்ச்சிக்கு பாராட்டுக்கள்