சர்வதேச அளவில் ஒரு விவகாரம் கசிகின்றது

சர்வதேச அளவில் ஒரு விவகாரம் கசிகின்றது அல்லது முணுமுணுக்கபடுகின்றது

அதாவது இந்தியா அமெரிக்க டாலரை வாங்கி குவிக்கின்றதாம், இதில் ஏதோ சதி என அமெரிக்கா முணுமுணுக்க, உலகமெல்லாம் நெற்றி சுருக்கி பார்க்கின்றன‌

இன்றைய உலகின் இதய துடிப்பு அமெரிக்க டாலர். தங்கம் முதல் பெட்ரோல் வரை அதில்தான் இயங்கும் ,அமெரிக்க டாலருக்கு நிகராக பரிவர்த்தனை செய்யபடும் அடுத்த நாட்டு பணங்களை பொறுத்தும, இன்ன பிற விவகாரங்களாலும் அமெரிக்க டாலருக்க்கு எதிரான பணத்தின் அளவு நிர்ணயிக்கபடும்

பெட்ரோல், தங்கம், பெரும் தொழில்கள். அமெரிக்க டாலர் இதில் ஏதாவது ஒன்றை அதிகம் வைத்திருக்கும் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக தங்கள் கரன்சி நிலையினை நிறுத்தும்

இந்தியாவிடம் பெட்ரோல் இல்லை, தங்கமும் இல்லை, பெரும் தொழிலும் இல்லை அதனால் அரசு அமெரிக்க டாலரை குறிவைத்து வாங்கி குவிக்கின்றது என்கின்றது செய்திகள்

முறையாக வாங்கினால் சிக்கல் இல்லை, ஆனால் குறுக்கு வழிகளில் வாங்கி குவித்துவிட்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பினை சரிகட்ட பார்க்கின்றது இந்தியா என்கின்றது அமெரிக்கா

விஷயம் பரபரப்பாகின்றது

இந்தியா சார்பில் ரகுராம் ராஜன் அப்படி எல்லாம அல்ல என என்னவோ சொல்கின்றார்

இந்தியா ஏதோ தகிடுதத்தோம் வேலை செய்கின்றது என முணுமுணுக்கின்றது அமெரிக்கா

உள்நாட்டில் அரசியலில் ஆயிரம் குறுக்குவழிகள் இருக்கலாம் செய்யலாம், ஆனால் உலகம் வேறு

அங்கெல்லாம் குறுக்குவழியில் ஆட முடியாது

வரும் செய்திகளை பார்த்தால் ஒன்றும் சரியாக படவில்லை. நாட்டின் பொருளாதாரம் சரிந்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் பெரும் வீழ்ச்சியினை சரிகட்ட அரசு ஏதோ செய்கின்றது என்பது மட்டும் புரிகின்றது