சார்ஜா சுல்தான் திராவிட கழகத்திற்கு நெருக்கமானவர் : முக ஸ்டாலின் பேச்சு
சார்ஜா சுல்தான் திராவிட கழகத்திற்கு நெருக்கமானவர் : முக ஸ்டாலின் பேச்சு
அதாவது ஸ்டாலின் துபாய்க்கு சென்றிருக்கின்றார், அங்கு நடந்த புத்தக திருவிழாவினை கண்டிருக்கின்றார், அங்கு வந்த சார்ஜா சுல்தானை பார்த்து இப்படி பேசியிருக்கின்றார்
தன் இனம், மொழி காக்கும் யாரும் திராவிட இயக்கத்திற்கு நெருக்கமானவர்கள், அப்படி சார்ஜா சுல்தானும் நெருக்கமானவர் என சொல்லியிருக்கின்றார் ஸ்டாலின்
இது சோ.ராமசாமி போன்றவர்கள் இருந்தால் எப்படி கலாய்க்க கூடிய விஷயம் தெரியுமா? இப்படித்தான்
“ஆக தீவிர இஸ்லாமிய மதத்தை கொண்டாடும் சார்ஜா சுல்தான் திராவிட இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்பதால் திமுகவிற்கு இனி காஞ்சி சங்கராச்சாரியாரும் நண்பர் ஆகிவிடுவார். தன் கோவில் தன் இனம் என இருப்பவர்தான் அவரும், சார்ஜா ராஜா போல தன் மொழி தன் அடையாளம் என திராவிடத்திற்கு நெருக்கமானவர்
அரேபிய மொழி பேசும் சார்ஜா குடும்பம் திமுகவொடு நெருங்கும்பொழுது சமஸ்கிருதம் பேசும் சங்கராச்சாரி நெருக்கமாக முடியாதா?
சார்ஜா சுல்தான் எப்படி திராவிடத்திற்கு நெருக்கமானார்? என சிந்த்தித்தபொழுது எனக்கு கிட்டிய விடை இதுதான்
சார்ஜாவில் தகப்பனுக்கு பின் மகன் மன்னராவார், அங்கு தேர்தல் எல்லாம் இல்லை
அப்படி திராவிட கழகங்களிலும் தகப்பனுக்கு பின் மகனே தலைவர், வீரமணிக்கு பின் அவர் மகனும் கலைஞருக்கு பின் ஸ்டாலினும் அப்படித்தான் வந்தார்கள்
அப்படி திமுகவிற்கு மிக மிக நெருக்கமாயிருக்கலாம் சார்ஜா அரச குடும்பம்”