சவுதிக்கும் ஈரானுக்கும் சண்டை மூட்ட முயற்சிகள்
சவுதி ஏமனில் குண்டு வீசி தீவிரவாதிகளை ஒழிப்பதில் மும்முரமாக இருக்கின்றது, தீவிரவாதிகளும் பதிலுக்கு சவுதியில் எப்பொழுதாவது குண்டுவெடிப்பு என பதிலுக்கு தாக்கிகொண்டிருந்தார்கள்
இப்பொழுது முதல் முறையாக ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது என செய்திகள் வருகின்றன
ஏமன் தீவிரவாதிகள் ஈரானிய கூட்டணி என்பதால் இம்மாதிரி ஏவுகனைகள் அவர்கள் கொடுத்ததாக இருக்கலாம் என சில தியரிகள்
ரியாத்தினை குறிவைத்து அந்த ஏவுகனையினை தடுத்துவிட்டததாக சவுதி அறிவித்தாலும், அது குறி தவறி தாக்கியிருக்கலாம் என்பது இன்னும் சிலர் சொல்லும் செய்தி , காரணம் ஏவுகனை தடுப்பு சாதனம் சவுதியிடம் இல்லை
எங்களால் சவுதியின் எந்த இடத்தினையும் தாக்க முடியும் என ஏவபட்டிருக்கும் இந்த ஏவுகனை கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது
முன்பொரு காலத்தில் ஈரானை வலுவிழக்க சதாமினை ஏவி விட்டார்கள் அமெரிக்கர்கள், பின் அவரே விருமாண்டி கமலஹாசனாக நிலைக்கு தள்ளபட்டடு கொல்லபட்டது எல்லாம் எல்லாம் காலம் கண்டது
இப்பொழுது சவுதிக்கும் ஈரானுக்கும் சண்டை மூட்ட முயற்சிகள் நடக்கின்றன
இனி என்ன நடக்க போகின்றதோ தெரியவில்லை