கருத்து சுதந்திரம் இல்லாமல் பாலா கைது செய்யபட்டுவிட்டாராம்…

கருத்து சுதந்திரம் இல்லாமல் பாலா கைது செய்யபட்டுவிட்டாராம், பத்திரிகை சங்கங்கள் பொங்கிகொண்டிருக்கின்றன‌

இதே பத்திரிகைகளில் ஒன்று குஷ்பூவினை மிக கீழ்தரமாக விமர்சித்தபொழுதும், இன்னொரு பத்திரிகை அவர் சொல்லாததை சொன்னதாக திரித்து எழுதி எல்லா நீதிமன்றங்களுக்கும் அலையவிட்டதெல்லாம் என்ன வகை?

அப்பொழுதெல்லாம் பத்திரிகையாளர்கள் எங்கிருந்தார்கள்?

உண்மையான பத்திரிகா தர்மம் எங்கிருக்கின்றது?

திமுக அமைச்சர் இருக்கும்பொழுது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரவேண்டிய இடத்தில் 50 ஆயிரம் கோடி வந்தால் அது ஊழல் என சொன்ன பத்திரிகைகளை பாஜக ஆட்சியில் 4 லட்சம் கோடி வரவேண்டிய இடத்தில் 40 ஆயிரம் கோடிதான் வந்திருக்க்கும் நிலையில் காணவில்லை

இதெல்லாம் பத்திரிகை சுதந்திரமா?

ஈழ விவகாரத்தில் இந்திய நிலைபாட்டை, இத்தேசம் ஈழப்போராளிகளுக்கும், அகதிகளுக்கும் செய்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒரு பத்திரிகை எழுதியிருக்கும்?

மாறாக இன்றும் இத்தேசத்திற்கு விரோதமாக எழுதும் பத்திரிகைகள் இன்றும் உண்டு

அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்களாம் கண்டுகொள்ள கூடாதாம் அது கருத்து சுதந்திரமாம்

ஆனால் ஏதும் நடவடிக்கை எடுத்தால் பொங்குவார்களாம்