வைகோ பிரபாகரனை சந்தித்த சம்பவத்தை கேட்டு பிரமித்தேன் : நடிகர் சத்தியராஜ்
வைகோ பிரபாகரனை சந்தித்த சம்பவத்தை கேட்டு பிரமித்தேன் : நடிகர் சத்தியராஜ்
அதாவது சென்னையில் ஈழம் தொடர்பான புத்தகம் வெளியிட்டார்களாம், அன்னார் இதில் இப்படி சொல்லியிருக்கின்றார்
இதே சென்னை மழையில் கலைஞர் ஒரு விழாவில் கலந்திருந்தால் வரிந்து கட்டி கிளம்புவார்கள், ஆனால் இவர்கள் தமிழர்கள் அல்லவா? அதனால் விழா நடத்தலாம்
ஏதோ வைகோ என்பவர் மட்டும்தான் உலகிலே பிரபாகரனை சந்தித்தது போல சத்யராஜ் பிரமிக்கின்றாராம்
யார் சந்திக்கவில்லை?
பண்ருட்டி ராமசந்திரன், பா.சிதம்பரம் என பிரபாகரனின் ஆரம்ப கால வாழ்க்கையில் சந்தித்தோர் ஏராளம் உண்டு. வீரமணி கூட உண்டு
சிறையில் இருக்கும் பேரரிவாளன் கூட ஈழம் சென்றுவிட்டு வந்தார் எனும் சில செய்திகள் உண்டு.
பிரபாகரனிடம் சில கோடிகளை ஆட்டையினை போட்டதாக சொல்லபடும் ஜெகத் கஸ்பர் என்பவரும் உண்டு
அவ்வளவு ஏன் சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரனை கைது செய்த உலகின் ஒரே நபரான மாணிக்கம் எனும் கான்ஸ்டபிளும் உண்டு
இவர்களில் யாரை பார்த்தும் வராத பிரமிப்பு இவருக்கு வைகோவினை பார்த்ததும் வந்ததாம்
எவ்வளவு தைரியமிருந்தால் இந்த சத்யராஜ் அங்கிள் சைமனின் வியப்பும் திகைப்பும் நிறந்த ஈழபயணத்தை பறறி சொல்லாமல் இருந்திருப்பார்
போகட்டும், ஏதும் தெலுங்கு படத்தில் சத்யராஜ் நடிக்காமலா போய்விடுவார், அன்று அங்கிளின் மங்கி படை கவனித்துகொள்ளும்.