பிரதமர் யார் எது எழுதிகொடுத்தாலும் வாசிப்பாரா?

மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடைக்கோடி வரை கொண்டு சென்றது தினத்தந்தி: பிரதமர் மோடி
இவர் என்றைக்காவது தினதந்தி படித்திருப்பாரா? யாரோ எழுதிகொடுத்ததை வாசித்துவிட்டு சென்றிருக்கின்றார்.
ஒரு பிரதமர் யார் எது எழுதிகொடுத்தாலும் வாசிப்பாரா?
காமராஜர் முதல் எந்த தேசியவாதியினையும் ஆதரித்த ஏடு அல்ல அது, நாம் தமிழர் கோஷம் செல்லுபடியாகாததால் பின் திமுக கோஷமிட்டு நேரத்திற்கொரு நடிப்பு நடித்த ஏடு அது
பின்பு ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் தொழிலினை செய்தது, செய்கின்றது
அது எந்த மக்களின் உணர்வுகளை எங்கே கொண்டு சென்றது என்றால் எல்லாம் கள்ளகாதல் கதைகளை தவிர ஏதுமில்லை
கொஞ்சமும் தேசிய அபிமானமில்லா ஒரு பத்திரிகைக்கு, டிவியில் கூட சீமான் போன்ற பிரிவினைவாதிகளையே வளர்க்க நினைத்த ஊடகத்திற்கு ஒரு பிரதமர் இப்படி எல்லாம் பேசுவது சரியல்ல
தாமரை பூ தான் உங்களுக்கு பிடிக்கும்ணு எங்களுக்கும் தெரியும், அதனை கொடுத்து வரவேற்கத்தான் முயற்சி செய்து பார்த்தோம், ஊரெல்லாம் வெள்ளம் கிடைக்கல
ரோசாபூதான் கிடைச்சுது.
நாங்க பூ கொடுக்குறோம், நீங்க இரண்டு இலையாவது கொடுத்துருங்க எசமான்