புதிதாக ஒரு வில்லங்கம் வந்திருக்கின்றது
பஸ்டாண்டுக்கு வரசொன்ன காலங்களை அடுத்து புதிதாக ஒரு வில்லங்கம் வந்திருக்கின்றது
அதாவது மோடி புனிதராம், பாஜக புனித கட்சியாம். எமக்கு நாட்டுபற்று என்றால் என்ன? பிரதமர் என்றால் யார்? அவரை எப்படி புகழ்வேண்டும் என தெரியவில்லையாம்
மாண்புமிகு பாரத பிரதமரை எல்லாம் கலாய்க்க கூடாதாம், அது மாபெரும் தவறாம்
நல்ல குடும்பத்தில் பிறந்தவன் அப்படி செய்யமாட்டானாம்
புனிதமான மசூதியினை இடித்தவன் எல்லாம் எப்படிபட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் என கேட்டால் பதில் இல்லை.மாறாக எமக்கு பல விஷயங்கள் தெரியவில்லையாம்.
அதனால் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு நான் செல்ல வேண்டுமாம், இவர்கள் புரிய வைப்பார்களாம்
உங்களை புரிந்து கொள்ள அங்கு வந்துதான் படிக்க வேண்டுமா? ஏடிஸ் கொசுவினை பற்றி தெரிந்துகொள்ள ஏன் டெங்கு கண்டவனிடம் செல்ல வேண்டும்?
நான் எதற்கடா ஆர்.எஸ்,எஸ் முகாம் வரவேண்டும்? மசூதிகளை எப்படி இடிக்கவேண்டும் , எப்படி எல்லாம் கலவரங்களை உண்டு பண்ணவேண்டும் என படிக்கவா? ஒத்திகை பார்க்கவா?
முடிந்தால் நீ கார்ல் மார்க்ஸ் கல்லறைக்கோ, சே குவேரா நினைவிடத்திற்கோ வா, மானுடம் என்றால் என்ன என விளக்குகின்றேன்
அவ்வளவு வேண்டாம் சபர்மதி ஆசிரமத்திற்காவது வா, கொஞ்சமேனும் உண்மை விளங்கும்
என்னமோ ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான் நாட்டுபற்றுள்ள இயக்கம் போலவும் அதில் இல்லாதவன் எல்லாம் நாட்டுபற்றை வாடகைக்கு விட்டிருப்பது போலவுமே பேசிகொண்டிருக்கின்றார்கள்.
ஒருத்தன் ஷரியா சட்டம் தெரியுமா வா சொல்லிதருகின்றேன் என்கின்றான், இன்னொருவன் ஆர்.எஸ்.எஸ் தத்துவம் தெரியுமா முகாமிற்கு வா என்கின்றான்
உங்களுக்கு எல்லாம் என்னடா பிரச்சினை?
நானே குஷ்பு அலுவலகத்திற்கு செல்லும் வழிதெரியாமல் திணறிகொண்டிருக்கின்றேன் அதனை ஒரு பயலும் சொல்வான் இல்லை
மாறாக பஸ் ஸ்டாண்ட் வா, மதராசா வா, ஆர்.எஸ்.எஸ் கோஷாவுக்கு வா என சொல்லி கொண்டிருக்கின்றனர்
டேமிட்ஸ்..