இதுதான் சமீபத்தில் மிகபெரிய ரைடு என்கின்றன இந்திய செய்திகள்
எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை : டி.டி.வி.தினகரன்
ஆக இன்னும் ஏராளமான ரெய்டுகள் நடத்தும் அளவிற்கு சொத்துக்கள் இருகின்றது என சொல்கின்றாரோ?
15 நாட்களுக்கு ஒருமுறைதான் சசிகலாவினை சந்திக்க முடியும் என்ற சட்டவிதி உண்டு, அதனை உடைத்து அருகிலே சென்று அமர்ந்துகொள்ள தினகரன் விரும்புவது போல் தெரிகின்றது.
வடக்கே அந்த ஹரியானா சாமியார் ஆஸிரம ரைடுக்கு பின் இதுதான் சமீபத்தில் மிகபெரிய ரைடு என்கின்றன இந்திய செய்திகள்
ஏதோ பெரும் மிரட்டலுக்கு தயாராகிவிட்டது புரிகின்றது
பெரும் தாதாக்களை ஒழித்துகட்ட களமிறங்குவது போல இறங்கியிருக்கின்றார்கள்.
பெரும் பாதுகாப்பு இல்லாத, அதாவது உறுதியான தலமை இல்லா தமிழக கட்சிகள் இம்மாதிரி சோதனைகளை கண்டே ஆகவேண்டும் அல்லது காலில் விழவேண்டும் என்பது இங்குள்ள யதார்த்தம்
அப்படி ஜெயா இல்லா நிலையில், தன் இழுப்புக்கு சரிவராத சசிகலா அணியினை குறிவைத்து அடிகின்றார்கள்
நம்புகின்றீர்களோ இல்லையோ எதிர்காலத்தில் திமுக இதனை விட மிகபெரும் சோதனைகளை சந்திக்கலாம்
பட்டமரத்திற்கு கோடாரி வைத்தவர்கள், பச்சை மரத்திற்கு நாள் குறித்திருப்பார்கள் என்பது ஒன்றும் ஊகிக்க முடியாதது அல்ல
ரெய்டுக்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை : தமிழிசை
தமிழிசை வாயினை பொத்த தமிழகத்து மொத்த பாஜகவினரும் ஓடி வந்துகொண்டிருக்கின்றார்கள்.