அறம் என்றொரு நயன் படம் வந்திருக்கின்றதாம்

இரு நாட்கள் இந்த முகநூல் பக்கம் வரமுடியாது போல, இந்த அறம் என்றொரு நயன் படம் வந்திருக்கின்றதாம்

Babu Rao என்பவர் அழிச்சாட்டியம் தாளவில்லை. அடுத்தவன் வீட்டை விற்றாவது தலைவியினை வைத்து படமெடுத்து பழிதீர்க்கலாம் என்றால் அவருக்கும் நலம் இல்லை

என்ன செய்யலாம்? ஏதாவது செய்யவேண்டும்

இந்த அறம் படத்தில் மோடியினை விமர்சிக்கின்றார்கள், இந்த‌ சுஷ்மா ஸ்வராஜினை , உமா பாரதியியினை விமர்சிக்கும் சாயலில் நயன் பாத்திரம் வடிவமைக்கபட்டிருக்கின்றது.

சில இடங்களில் சிறையில் ஒரு பெண் அரசை நோக்கி சாபமிடுவது போல காட்சிகள் இருக்கின்றனவாம் என தமிழிசை காதில் சொல்லிவிடலாம்

அதன் பின் அறம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க “முறம்” சகிதமாக தமிழிசை கிளம்பிவிட மாட்டாரா? படம் தப்புமா?

அதன் பின் Babu Rao என்ன செய்கின்றார் என பார்த்துவிடலாம்


யோவ் Babu Rao வாயினை வைத்துகொண்டு சும்மா இருயா..

உன்போக்குல அறம் படம் 200 கோடி 300 கோடி வசூல் என அள்ளிவிட்டுகொண்டிருக்கின்றீர், இங்கே சும்மாவே 2000 வருமானவரி அதிகாரிகள் சுற்றி கொண்டிருக்கின்றார்களாம்

நீர் பேசுவதை கேட்டுவிட்டால் நயன் வீட்டில் புகுந்தால் முடிந்தது விஷயம்

என்னய்யா பெரிய வசூல்?

சின்னதம்பி படம் இப்பொழுது வெளிவந்தாலும் அசால்ட்டாக 3000 கோடி வசூலிக்கும் தெரியுமா?