அறம் படமும் தலைவிக்குரியது…

முதல்வன் படத்தில் நடிக்க முதலில் ரஜினியினைத்தான் அழைத்தார்களாம், ஆனால் அடிக்கடி அரசியல் ஆட்டம் ஆடும் ரஜினி அந்தபடத்தில் நடித்தால் தன் அரசியல் கூடும், சரிவராது என மறுத்தார் என செய்திகள் சொல்லும்

இந்த அறம் படமும் தலைவிக்குரியது, தலைவி அரசியலில் தீவிரமாக இருப்பதால் இப்படம் தனக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் என்பதால் மறுத்துவிட்டார்

அதில்தான் நயன் நடித்துவிட்டார் இதுதெரியாமல் Babu Rao என்பவர் குதிக்கின்றார்

பெண்ணியம் பேசும் படங்கள் ஏராளம் உண்டு, அவ்வையார் படம் அந்த வகையில் வராது, காரணம் அவ்வையார் பெண்தான் ஆனால் பெண்ணியம் பேசவில்லை, நல்ல மனைவி அமையாவிட்டால் போய் சாவு என்றுதான் ஆண்களுக்கு ஆறுதல் சொல்லிகொண்டிருந்தார்

கலைஞரின் பூம்புகாரில் பெண் குரல் சீறியது, அதன் பின் பாலசந்தர் காலம், விசு படங்கள் வந்தன , பெண்ணியம் பேசியது

இப்பொழுது கூட 36 வயதினிலே, மகளிர்மட்டும் என சில படங்கள் வந்திருக்கின்றது . அப்படி அறம் படம் வந்திருக்கின்றது, இந்த படத்திற்கு முன்னோடி படம் எது தெரியுமா?

தலைவியின் “கேப்டன் மகள்”, அறம் எல்லாம் அதனருகே வர முடியாது. தைரியமான பெண் எப்படி இருக்க வேண்டும் என தமிழக சினிமாவிற்கே தலைகீழ் திருப்பம் கொடுத்தபடம்

அதனால் அறம் படத்தின் டைட்டில் கார்டில் தலைவிக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும், அவர்கள் செய்யவில்லை

சங்கம் அதனை வன்மையாக கண்டிக்கின்றது.