அரசியல்வாதி என்றால் கோவணத்துடன் இருக்க வேண்டுமா : தினகரன் சீற்றம்

அரசியல்வாதி என்றால் கோவணத்துடன் இருக்க வேண்டுமா : தினகரன் சீற்றம்

அட அப்படி எவன் சொன்னான்?

ஆனால் பரம்பரை சொத்து அல்லது சுயதொழில் என எதாவது இருந்தால் சிக்கல் இல்லை, இவ்வளவு சொத்து குவிக்க என்ன தொழில் செய்தார்கள்?

கோவணம் விற்கும் தொழில் கூட செய்ததாக தகவல் இல்லையே?

உருப்படியாக என்ன தொழில் செய்தார்கள் இவர்கள்?

28 வயது பையன் ஆயிரம் கோடியில் தொழில் தொடங்குவானாம் , பல்லாயிரம் கோடி சம்பாதிப்பானாம், இதனை கேட்டால் நாங்கள் கோவணத்தோடு அலையவேண்டுமா என்கின்றார் தினகரன்

மிஸ்டர் தினகரன்? ஒரு கோவணம் என்ன பல்லாயிரம் கோடி ரூபாயா? அவ்வளவு விலை உயர்ந்த கோவணமா அணிவீர்கள்?

மனிதர் பதற்றத்தின் உச்சத்தில் பேசுகின்றார், அவரே வாயால் சிக்கிகொள்வார் போல..