முதலில் தொடங்கியது நாட்டாமை டிரம்ப் தான்
அணுகுண்டால் அடித்துகொள்கின்றார்களோ இல்லையோ டிரம்பும் வடகொரிய கிம்மும் வார்த்தையால் அடித்துகொள்கின்றார்கள்
முதலில் தொடங்கியது நாட்டாமை டிரம்ப் தான்
வடகொரியா ஒரு தீயசக்தி என்பதில் தொடங்கி, வடகொரிய ரவுடி, என வந்து இறுதியாக வெள்ளை குண்டன் என்றளவில் பேசினார் டிரம்ப்
வடகொரிய அதிபரோ போடா கிழவா என்று சொல்லிவிட்டார்
அவ்வளவுதான் டிரம்புக்கு கோபம் வந்துவிட்டது, கூடவே அமெரிக்க நாகரீகமும் நினைவுக்கு வந்தது
இனி அவரை குண்டன் என சொல்லமாட்டேன் என சொல்லிவிட்டார்
ஆனால் நான் அவரை கிழவன் என்றுதான் சொல்வேன் என அடம்பிடிக்கின்றார் வெள்ளை குந்தாணி
நான் கிழவனா என அவமானத்தில் தன் 40 வயது மனைவியிடம் அழுகின்றார் 71 வயது டிரம்ப்
“ராசா நீனா கிழவன்? உன்னை பற்றி அந்தாளுக்கு என்ன தெரியும்” என டிரம்புக்கு ஆறுதல் சொல்கின்றார் டிரம்பை பற்றி வெளி தெரிந்த கணக்கில் 3ம் மனைவியான மெலீனா.