சீனா கம்யூனிச நாடு

சீனா கம்யூனிச நாடு, அங்கு மத உரிமைக்கு அவ்வளவு முன்னுரிமை இல்லை. திபெத்தை புத்தமதத்திற்காகவே மிரட்டி பிடித்த சீனா அம்மதம் எழும்பாமல் பார்த்துகொள்கின்றது

ஆனாலும் ஹாங்காங் வழியாக ஊடுருவும் மேல் நாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அங்கு கிறிஸ்தவம் வளர்க்கின்றார்கள், இது சீன அரசுக்கு எரிச்சலை கொடுக்கின்றது

இப்பொழுது சீன கிறிஸ்தவ வீடுகளில் இயேசு படத்திற்கு பதிலாக சீன அதிபர் ஷின் பெங்கின் படத்தை வைக்க சீன அரசு நெருக்கடி கொடுக்கிது என செய்திகள் வருகின்றன‌

மக்களை வறுமையிலிருந்து மீட்பது இயேசு அல்ல அதிபர் ஷின்பெங் என சீன அரசு பிரச்சாரம் செய்கின்றதாம்

விஷயம் உலக அரங்கில் சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது

விஷயம் தமிழிசை கும்பலுக்கு தெரியாது போல, தெரிந்தால் கருப்பு பணத்தை மீட்ட‌ மோடியின் படம் எல்லா இந்தியர் வீட்டிலும் இருக்கவேண்டும் என கிளம்பியிருக்க மாட்டாரா?