நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட்
நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட்
அவ்வளவு எளிதில் சிறைக்கு செல்லமாட்டார், இனி உச்சநீதிமன்றம் செல்லலாமா? அங்கு குமாரசாமி போல யாரும் இருந்துவிடமாட்டானா? என்றெல்லாம் திட்டமிடுவார்கள்
அவரின் உடல்நிலை கூட அவருக்கு சாதகம்
ஆனால் குறிவைத்துவிட்ட மேலிடம் இந்த வாய்ப்பினை தவறவிடுமா என்றால் விடாது, இடம்பார்த்து அடிக்கும்
எதற்கும் இப்பொழுதே ஜெயா சமாதியில் அடித்து சத்தியம் செய்துவிட்டு நடராஜன் தயாராக இருக்க திட்டமிடலாம்
இந்த தீர்ப்ப்பால் தினகரன் பெரும் அதிர்ச்சியில் இருக்கலாம், இனி அடுத்து அவர் வழக்கு என்னாகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஆக மன்னார்குடி கும்பலே தனி சிறைச்சாலையில் இருக்கும் போல..