சன்டிவியில் பன்னீர் செல்வமும் ஜெயா டிவியில் துரைமுருகனும்

 

சன்டிவியில் பன்னீர் செல்வமும், ஜெயா டிவியில் துரைமுருகனும் பேசுவதாக செய்திகள் வருகின்றன‌

சசிகலா மீதான ரெய்டுகள் இன்னும் அதிகமானால் சி.ஆர் சரஸ்வதி சன் டிவியிலும், அன்பழகன் போன்றோர் ஜெயா டிவியிலும் ஒப்பாரி வைப்பார்கள்

ஏன் என்றால் அப்படித்தான்

ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே பல ரகசிய ஒப்பந்தகள் நடக்கும் தமிழகத்தில், மாநில முதல்வர் பதவிக்கு என்னென்ன எழுதபடா ஒப்பந்தங்கள் எல்லாம் நடந்திருக்கும்?

விலகி இருந்து அடித்துகொள்வது போல சீறுவதும், டெல்லி களமிறங்கபார்த்தால் ஒன்றாக நின்று டெல்லியினை பார்த்து இவர்கள் சிரிப்பதும் காலம் காலமாக நடக்கும் ஒன்று

தமிழக அரசியலில் ஏன் மிக கவனமாக கரை நிற்க வேண்டும் என்றால் இதற்காகத்தான்

பெரியார் சொன்னது போல “இந்த அரசியல்ல ஒரு பயலையும் நம்ப கூடாதுங்க‌, பூரா பயலும் அவனவன் பொழப்புல கவனமா இருக்கிறாங்க..”


கொசுறு

கணவணை கள்ள காதலனுடம் சேர்ந்து கொன்று புதைத்தாள் மனைவி : செய்தி

அப்புறம் என்ன லட்சுமி குரூப்ஸ், லட்சுமி Part II எடுக்க கிளம்பிவிட வேண்டியதுதானே?

ம்ம்.. ஏற்கனவே பாரதி பாடலில் கும்மியடித்தாகிவிட்டது, அதனால் இம்முறை “மனதில் உறுதி வேண்டும், கொலை செய்ய வீரம்” வேண்டும் என்ற பாடலோடு வாருங்கள்