இரட்டை இலையும் தந்தாச்சி வேற என்ன குழப்பம்??
பன்னீர் பழனிச்சாமி கோஷ்டி பூசலால் ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதம் : செய்தி
“என்ன மிஸ்டர் பழனிச்சாமி, இரட்டை இலையும் தந்தாச்சி வேற என்ன குழப்பம்??
அய்யா அந்த பன்னீரு இந்த அணிக்கு சீனியராம், நான் ஜூனியராம் அதனால அவர் சொல்றத கேக்கணுமாம், இப்போ நீங்க கூட பாஜகவில ஜூனியர்தான் , அத்வாணி ஜோஷிண்ணு எவ்வளவோ சீனியர் இருக்கிறப்போ நீங்க பிரதமர் ஆகலயா, கட்சிய நடத்தலயா?
அப்படி நான் முதல்வர் ஆயிட்டேன், அவர் அத்வாணி மாதிரி தியாகம் பண்ணனும், அவருக்கு புரியவே மாட்டேங்குது. கொஞ்சம் எடுத்து சொல்லுங்க. என் நிலமையினை உங்கள விட்டா யாரு புரிஞ்சிக்க முடியும்??”