தலைவி மிக பாதுகாப்பாக இருக்க சங்கம் பிரார்த்திக்கின்றது

புயலில் இம்முறை தென்மாவட்டங்கள் பாதிக்கபட்டிருக்கின்றதாம், வடக்கே சிக்கல் இல்லை

அதனால் தலைவி குஷ்பு மிக பாதுகாப்பாக இருப்பார் என்பதில் சங்கம் நிம்மதியும், மகிழ்வும் அடைகின்றது

தலைவி மிக பாதுகாப்பாக இருக்க சங்கம் பிரார்த்திக்கின்றது

ஆனாலும் இப்பொழுதெல்லாம் அமைதியாகிவிட்ட தம்பி Sadhu Sadhathஎன்பவருக்கு சங்கம் அழைப்பு விடுக்கின்றது

தம்பி வா.. 
தலமை ஏற்க வா.. 
தலைவிக்காக வா.. 
தரணியினை தலைவிக்கு 
தாரைவார்ப்போம் வா..


எகிப்தின் கிளியோபாட்ரா, இந்திய ராணி சம்யுக்தா, பிரான்சின் ஜொன் ஆப் ஆர்க் என்ற மூன்று அழகிகளும் வரலாற்றில் அழகான பெண்கள் : வரலாற்று செய்தி

இதுவா வரிசை?

இந்த வரிசையில் முதலில் வரவேண்டியது யார் தெரியுமா? அதனை சொன்னால் யார் கேட்க போகின்றார்கள்??

கேட்க மாட்டார்கள் ஆனாலும் அது தலைவி குஷ்பு என்பது இந்த பிரபஞ்சமே அறிந்த ஒன்று

இந்த வரிசை இன்னும் கொஞ்ச நாளில் மாற்றி எழுதபட வேண்டும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு.

தலைவி பெயர் பட்டியலில் இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்