உடல்கள் கரை ஒதுங்குகின்றன.. அச்சம் மேலோங்குகின்ற நேரமிது…
கன்னியாகுமரி பக்கம் மீன்பிடிக்க சென்று திரும்பாத மீணவர்கள் பற்றி எந்த மீடியாவும் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை
மிகபெரும் இருட்டடிப்பினை செய்கின்றார்கள் , காரணம் வெகு எளிதானது
அதாவது இந்த கொடூர புயல்பற்றி எச்சரித்திருக்க வேண்டும், மழை அவர்களுக்கு பழகிபோன விஷயம் எனப்தால் மழைக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல அவர்கள்
ஆனால் கொடூர புயல் பற்றி முழு எச்சரிக்கை இல்லை , புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றபடவில்லை, இதெல்லாம் யார் தவறு என்றால் நிச்சயம் அரசு பக்கம்தான்
தனுஷ்கோடி புயலால் அழியும்பொழுது நம்மிடம் அதனை முன்னே அறியும் வசதி இல்லை, அதனால் அழியவிட்டோம்
இன்றோ ஏராளமான செயற்கைகோள் முதல் இன்னும் பல விஷயங்களில் முன்னேறியுள்ளோம், பின் எப்படி இந்த தவறை ஏற்றுகொள்ள முடியும்?
புயலை கண்டறியும் செயற்கை கோள்கள் மக்கள் பணத்திலே மக்களுக்காக ஏவபட்டிருக்கின்றதே அன்றி வேறு காரணம் அல்ல
நிச்சயம் செயற்கைகோள் எச்சரித்திருக்கும்
தவறு வேறு எங்கோ நடந்திருக்கின்றது, குளச்சலுக்கு கொஞ்ச தூரத்தில் சர்வதேச கடல்பகுதி வரும் ஜப்பானிய கப்பல்கள் எல்லாம் நின்று மீன்பிடிக்கும்
இப்புயலில் வெளிநாட்டு கப்பல்கள் ஏதும் பாதிக்கபடவில்லை எனில் என்ன அர்த்தம்? அக்கப்பல்களை அந்நாட்டு அரசுகள் அப்புறபடுத்தியிருக்கின்றன
இங்கோ ஒரு எச்சரிக்கையுமில்லை, முறையான தகவல் இல்லை
நிச்சயம் எங்கோ தவறு நடந்திருக்கின்றது, அதன் விளைவு ஏகபட்ட மீணவர்கள் சென்றிருக்கின்றார்கள், சிக்கி இருக்கின்றார்கள்
பொறுப்பானவர்கள் செய்யும் தவறு எப்படி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது இப்பொழுது புரிகின்றது
அப்படியும் கேரள பக்கம் அம்மாநில அரசு உடனே ஹெலிகாப்டர்களை அனுப்பி பலரை காப்பாற்றி இருக்கின்றது, தமிழக பக்கம் அப்படியும் செய்யவில்லை
நிர்மலா சீத்தாராமன் கன்னியாகுமரி வந்தாலும் உருப்படியாக பேசவில்லை, சம்பிரதாயமாக பதிலளித்திருக்கின்றார்
பலர் மீட்கபட்டிருக்கின்றார்கள் என அவர் சொன்னது மகா ஆறுதலான தகவல்
அனாலும் சில உடல்கள் கரை ஒதுங்குகின்றன, அச்சம் மேலோங்குகின்ற நேரமிது,