காமெடியன் மயில்சாமியின் கருத்து 100% உண்மை
காமெடியனாக இருந்தாலும் மிக சரியான கருத்தினை சொல்லியிருக்கின்றார் மயில்சாமி
அவரது கருத்து 100% உண்மை.
திமுகவின் தொண்டர்பலம் அப்படி. உண்மையில் தியாகம் நிறை தொண்டர்களை அங்குதான் பார்க்கமுடியும். பெரியார், அண்ணா கலைஞர் என எல்லோரின் பாதிப்பிலும் உருவான உணர்ச்சி பிழம்புகள் அவர்கள்
அதிமுக தேர்தலில் வெல்வது இன்றுவரை ஆச்சரியமே, ஜெயா காலத்தில் அது மகா ஆச்சரியம். முன்பொருமுறை தோற்றுவிட்டு வோட்டு மெஷினில் கோளாறு என்றார் ஜெயா, உண்மையில் அவர்கள் வென்றிருக்கும்போதுதான் அக்கேள்வி வந்திருக்க வேண்டும்
திமுக தொண்டர்களின் உழைப்பும், தியாகமும் சாமான்யம் அல்ல
நேற்றல்ல இன்றல்ல, என்றுமே தமிழகத்தில் பெரும் எழுச்சியினை உண்டுபண்ண முடியுமென்றால், தமிழகம் போர்கோலம் பூண்டு நிற்கவேண்டுமென்றால் அது திமுகாவால் மட்டுமே முடியும், ஒரே காரணம் அதன் தொண்டர்கள்
கலைஞர் மேல் பலருக்க்கு என்ன கோபம்?
அவர் பிரபாகரன் கொல்லபடும்பொழுது அமைதியாக இருந்தார் என பல விஷயங்கள்
கிட்டதட்ட 7 ஆண்டுகள் அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பிரபாகரனின் பிடிவாதம் ராஜிவ் கொலைவரை சென்றது, அதன் பின்னும் 2009ல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தார், பிரபாகரனின் பிடிவாதமும் அவனை தூண்டிவிட்ட வைகோ போன்றவர்களின் அணுகுமுறையுமே முள்ளிவாய்க்காலுக்கு காரணம்
கலைஞர் நினைத்திருந்தால் தமிழகத்தில் பெரும் போராட்டத்தை உண்டுபண்ண முடிந்திருக்குமா என்றால் நிச்சயம் முடிந்திருக்கும்
ஆனால் தன் தொண்டர்களை தவறாக நடத்த அவர் விரும்பவில்லை, ஒரு தேசதுரோக கும்பலுக்காக தன்னை நம்பி வந்த தொண்டர்களை அவர் பலிகொடுக்க தயாரில்லை
அதுதான் உண்மை
அங்கிள் சைமன் அவரின் மங்கிகளுக்கு இதெல்லாம் தெரியாது, இவர்கள் நெத்திலி போல குதிக்கலாம்
திமுகவில் பெரும் சுறாக்களும், திமிங்கலங்களும் உண்டு கலைஞர் கொஞ்சம் கண்ணசைத்திருந்தால் அங்கிள் சைமனை எல்லாம் கட்டி போட்டு கொண்டு சென்றிருப்பார்கள்
மயில்சாமியின் வார்த்தைகள் நிதர்சனமானது, அப்படிபட்ட அசாத்திய தொண்டர்பலமிக்கது திமுக
திமுகவின் தொண்டர்பலம் அப்படி, அசைக்கமுடியா பலம் அது, அவ்வகையில் ஒவ்வொரு தொண்டனும் பெருமிதம் கொள்ளலாம்.
அவனின் அர்பணிப்பும், தியாகமும் அப்படிபட்டது.
தமிழகம் அமைதியாகிவிட்டது என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்
இல்லை, இன்றும் திமுக நினைத்தால் பெரும் எதிர்ப்பினை , பெரும் கூட்டத்தை அதனால் நொடியில் திரட்ட முடியும். அதற்கான நேரத்திற்காக காத்திருக்கின்றது