குமரி முதல் குஜராத் வரை…
குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்ய கிளம்புகின்றார் ஆளுநர் பன்வாரிலால் புரொகித்
புயலுக்கு பின் ஆளுநர் குமரி செல்ல தயாராகும்பொழுது , கருப்பும் வெள்ளையுமாக பிரேமம் படத்து நவின் பாலி போல் சென்னையில் போஸ் கொடுத்துகொண்டிருக்கின்றார் முதல்வர்
நிச்சயம் இதெல்லாம் நல்ல மதிப்பீடுகளை தராது, பழனிச்சாமி அரசு இதற்கான விலையினை கொடுக்க வேண்டி இருக்கும்
தேர்தல் ஆணையம் மகா விசித்திரமாது
விஷாலுக்கு முன்மொழிந்தவர் சரியில்லை என்கின்றது , தீபாவிற்கு பாரம் நிரப்ப தெரியவில்லை என்கின்றது
இப்படியாக மகா ஸ்டிரிக்டாக தன் கடமையினை செய்யுமாம்
ஆனால் ஜெயா அப்பல்லோவில் இருந்தபடியே கொடுத்த விண்ணபத்தை தலைமேல் ஏற்றுகொண்டது முன்பு நடந்த விஷயம்
ஜெயா உண்மையிலே கையெழுத்து போட்டாரா? கைநாட்டு வைத்தாரா? ஆதாரம் உண்டா என்றெல்லாம் கேட்கவே இல்லை
இந்த ஆணையம்தான் நியாயமான தேர்தலை நடத்துமாம், நம்பிகொள்வோம்
ஆசிட் வீசுவேன்’ என மிரட்டல்: வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தீபா பகீர் தகவல்
ஆசிட் வீசுவதெல்லாம் உங்கள் அத்தை கட்சி கலாச்சாரம் அல்லவா? அவர்கள் அதனைத்தான் சொல்லி மிரட்டுவார்கள்
உங்கள் அத்தையின் கட்சி கொள்கை உங்களுக்கே மிரட்டலாக வருகிறதென்றால் இதுதான் காலசக்கரம்
குஜராத்தில் சம பலத்துடன் பாஜக – காங்கிரஸ்: புதிய கருத்துக் கணிப்பு
இதில் என்ன கருத்து கணிப்பு வேண்டியிருக்கின்றது?
ஜிஎஸ்டி குறைப்பு, மாடு எப்படியும் போகட்டும் என பாஜக பின்வாங்குவதிலே கணிக்க முடியாதா?