அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் நியமணம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் நியமணம்
அன்னாருக்கு வாழ்த்துக்கள், காங்கிரசுக்கு மட்டுமல்ல இத்தேசத்திற்கே பெரும் எழுச்சியினை கொடுக்கும் பொறுப்பு அவர் தோள்மீது சுமத்தபட்டிருக்கின்றது
அவர் பாட்டியும், தந்தையும் விட்டுவிட்டு சென்ற கடமைகளை, கனவுகளையும் அவர் நிறைவேற்ற காலம் வாய்ப்பளிக்கட்டும்
ஏகபட்ட சவால்கள் ராகுல் முன் இருக்கின்றன, அவற்றை அவர் எப்படி எதிர்கொள்ள போகின்றார் என தேசமே எதிர்பார்க்கின்றது, எதிர்ப்பார்ப்பு ஏராளம்
முதலில் தமிழக காங்கிரசில் ராகுல் செய்யவேண்டியது, அந்த திருநாவுக்கரசரை விரட்டிவிட்டு நல்ல தலமையினை நியமிப்பது
அது குஷ்புவாக இருந்தால் ஏக மகிழ்ச்சி
தமிழகத்தில் முக்கிய கட்சிகள் வலுவிழந்து வரும் நிலையில், தகுந்த திட்டங்களோடு களமிறங்கினால் காங்கிரஸ் தன் பொற்காலத்தை மீண்டும் அடையலாம்