தோல்வி வந்துவிடுமோ என கலங்கும் மோடி…
பல விஷயங்களில் தோல்வியும், மேற்கொண்டு தோல்வி வந்துவிடுமோ எனும் கலக்கமும் ஒரு மனிதனை பெரும் விரக்திக்கும் அலறலுக்கும் உள்ளாக்கிவிடும் என்பதற்கு பாரத பிரதமரே பெரும் சாட்சி
இல்லாவிட்டால் அகமது பட்டேலை குஜராத் முதல்வராக்க பாகிஸ்தானும் மணிசங்கர அய்யரும் மன்மோகன் சிங்கும் சதி செய்கின்றனர் என புலம்புவாரா?
அப்படி சதிசெய்ய வேண்டுமென்றால் பதவியில் இருந்தபொழுது மன்மோகன்சிங்கால் செய்திருக்க முடியாதா? இப்பொழுதுதான் செய்ய வேண்டுமா? என்ன பைத்தியகாரதனம் இது, அபாண்டமான பொய்.
இதனை அக்கட்சியின் அடிப்பொடிகளோ இல்லை வழக்கமான உளறல்காரர்களோ சொல்லியிருந்தால் விட்டுவிடலாம், பாரத பிரதமர் எனும் பெரும் பொறுப்பில் இருப்பவர் சொன்னால் எப்படி?
ஆதாரமில்லா செய்திகளை ஒரு பிரதமர் சொல்வது ஏற்றுகொள்ள முடியாதது,
இனி அவர் சொல்வதை எல்லாம் இத்தேசம் எப்படி நம்பும்?
அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு என சர்ச்சை வந்தபொழுது பெரும் ஆதாரங்களை சேகரித்தபின்புதான் இப்பொழுது விசாரணை நடக்கின்றது
அப்படி அல்லாமல், கொஞ்சமும் அடிப்படை ஆதாரமின்றி பெரும் பொறுப்பில் இருக்கும் பிரதமர் பேசுவது பெரும் கண்டனத்திற்கும் , பெரும் கலக்கத்திற்கும் உரியது
மனிதர் பதற்றத்தின், வெறுப்பின் உச்சத்தில் உள்ளார் என்பது புரிகின்றது
இனி ஆர்.கே நகர் தேர்தலை பற்றி என்ன சொல்வார் மோடி?
சிங்கள உளவுதுறையுடன் சேர்ந்து பாஜகவிற்கு எதிராக தமிழகத்தில் பெரும் சதி நடக்கின்றது, சிங்கள அதிகாரியுடன் ஸ்டாலின் போன்றோர் சந்தித்தார் என கிளம்பினாலும் கிளம்பலாம்
அத்தோடு நிறுத்திகொண்டாலும் பரவாயில்லை, அதற்கு மேல் தமிழிசையினை கடத்த சி.ஐ.ஏ , மொசாத் எல்லாம் சதி செய்கிறது என சொல்லாமல் இருக்க வேண்டும்
ஒருவேளை அப்படி சொல்லிவிட்டால் உடனே சி.ஐ.ஏ கலைக்கபடாதா? மொசாத் உடனே தற்கொலை செய்துகொள்ளாதா?