ரஜினி பிறந்த நாளையொட்டி எல்லா சேனலிலும் ரஜினி படமே ஓடுகின்றது
ரஜினி பிறந்த நாளையொட்டி எல்லா சேனலிலும் ரஜினி படமே ஓடுகின்றது
பொல்லாதவன் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த தாடியும் கண்ணாடியும் கொண்ட இறுக்கமான முகத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கின்றது
இந்த படத்தின் தாடியும் கண்ணாடியுமே பின்னாளில் பாட்ஷா, கபாலி என ரஜினி வந்து நிற்க காரணம், அது இன்றும் தொடர்கின்றது
படம் அக்கால பார்முலா என்றாலும் நடிகை லட்சுமி அவ்வளவு அழகு.
அழகு என்பதையும் மீறி மிகசிறந்த நடிகை
ரஜினியிடம் விஷேசித்த ஒரு தன்மை இருக்கின்றது என்றால் அந்த உடல்கட்டு
அபூர்வ ராகங்கள் , இந்த பொல்லாதவனில் பார்த்த அதே மேனிதான் பாஷா, கபாலி என இன்றுவரை அப்படியே இருக்கின்றது , ஒரு மில்லி மீட்டர் கூட கூடவுமில்லை குறையவுமில்லை
மனிதருக்கு எல்லாவற்றிலும் ஒரு வரம் இருந்திருக்கின்றது