பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கணவன் மீது ஆசிட் ஊற்றியது யார்?

ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உலகமே அதிரும் பெரும் விபரீத திட்டம் ஒன்று காதலர்களால் போடபட்டு அது பிடியும் பட்டு பெரும் பரபரப்பாகின்றது

அதாவது ஒரு ஆணும் பெண்ணும் காதலித்திருகின்றார்கள் , திருமணமும் செய்திருக்கின்றார்கள். அதன்பின் வந்திருக்கின்றது சிக்கல்

அப்பெண்ணுக்கு இன்னொருவன் மேலும் காதல் வந்திருக்கின்றது, அப்படியானால் முதல் கணவனை என்ன செய்ய? போ என்றால் போவனா?

இதனால் இந்த கள்ளகாதலர்களின் திட்டபடி அவன் முகத்தில் யாரோ ஆசிட் ஊற்றினார்கள் என சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என சொல்லி கிளம்பி வழியிலே கொன்று எரித்திருக்கின்றார்கள்

பின் அந்த கள்ளகாதலன் முகத்தையும் காலா ரஜினி போல கருக்கிவிட்டு இவன் தான் கணவன் ஆசிட் ஊற்றபட்டுவிட்டது பிளாஸ்டிக் சர்ஜரி செய்யுங்கள் என மருத்துவமனையில் சேர்த்துவிட்டாள் அந்த சாகசகாரி

அவள் திட்டப்படி எல்லாம் நடந்திருக்கின்றது , ஆசிட் வீச்சில் முகம் கருகி சர்ஜரியில் மாறிவிட்டது என்றே எல்லோரும் நினைத்திருக்கின்றார்கள், சாகசமாக கணவனை கொன்றுவிட்டு கள்ள காதலனை கணவனாக்கிவிட்டாள் அப்பெண்

ஆனால் சிக்கல் போலிஸ் விசாரணையில் வந்திருக்கின்றது, கணவன் மீது ஆசிட் ஊற்றியது யார்? என்ற விசாரணையில் கைரேகை அது இது என வந்து காதல் பறவைகள் சிக்கிவிட்டன‌

அவர்கள் சிக்கினாலும் திட்டம் மகா நுட்பமானது, தீவிரவாத இயக்கங்களுக்கு கூட வராதது என உலகமே வியந்துகொண்டிருக்கின்றது

நல்ல வேளையாக இந்த திட்டம் அப்பல்லோவில் ஜெயா இருந்தபொழுது சசிகலாவிற்கு வரவில்லை, அப்படி சிந்தனை வந்து பிளாஸ்டிக் சர்ஜரியுடன் முகத்தை மாற்றி, நானே ஜெயா என சசிகலா வந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *