தலைவி வாழ்க, ஜெயா டிவி வாழ்க..

இப்பொழுதெல்லாம் ஜெயா டிவி மிக சரியான பாதையில் செல்கின்றது, மக்கள் மனதை எப்படி கரைக்கலாம் என்பதில் மிகுந்த திட்டமிட்டு செயல்படுகின்றது

அதனால் குஷ்பு படங்களாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டது, மிக நுட்பமான நகர்வு இது, வாழ்த்துக்கள்

சின்னதம்பி, வருஷம் 16, பிரம்மா, வரிசையில் இன்று அம்மா வந்தாச்சு என்ற படம் ஓடிகொண்டிருக்கின்றது

பின் என்ன?

“குஷ்பு வந்தாச்சு” என சொல்லி டிவி முன்னால் அமந்தாயிற்று, இரு கண் அல்ல இரண்டாயிரம் கோடி கண்கள் இருந்தாலும் தலைவியின் கன்னத்தை மட்டும் ரசிக்க போதாது

அப்படி சுவிஸ்நாட்டு ஆப்பிளாக 
ஜொலிக்கின்றார் குஷ்பு.

முகத்தில் அணிந்த கண்ணாடியில் கூட அப்படி ஒரு அழகு, மகாத்மா காந்தியின் கண்ணாடிக்கு பின் பெரும் வரவேற்பு கொண்ட கண்ணாடி அதுதான்

அது எங்கிருந்தாலும் உடனே கண்டுபிடிக்க வேண்டும்

இப்படி எல்லாம் நம்மை மகிழ்வித்தால் சங்கம் என்ன செய்யும்? அதுவும் சத்தியத்திற்கு கட்டுபட்டது அல்லவா?

அதனால் ஆர்.கே நகரில் தினகரனுக்கும், பெங்களூரில் சசிகலாவிற்கும் வோட்டளிக்கும் உற்சாகத்தில் சங்கம் இருக்கின்றது

தலைவியின் அருமை ஜெயா டிவிக்கு தெரிந்திருக்கின்றது, அடுத்த ஜெயலலிதா குஷ்பு என்பது அதற்கு புரிந்துவிட்டது

தலைவி வாழ்க, ஜெயா டிவி வாழ்க..